ADDED : ஏப் 03, 2026 05:38 PM
அ நிறம் | அளவு
சென்னை:கேரளா விஷு விழாவை ஒட்டி, சென்னை எழும்பூரில் இருந்து கர்நாடகாவுக்கு, சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
மங்களூரு சென்ட்ரலில் இருந்து, வரும் 6, 13ம் தேதிகளில், மாலை 4:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:30 மணிக்கு எழும்பூர் வரும். எழும்பூரில் இருந்து, வரும் 7, 14ம் தேதிகளில், மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:50 மணிக்கு மங்களூரு செல்லும்.
இந்த சிறப்பு ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக இயக்கப்படும். இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
