/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை - ஷாலிமார் சிறப்பு ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு
/
சென்னை - ஷாலிமார் சிறப்பு ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு
சென்னை - ஷாலிமார் சிறப்பு ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு
சென்னை - ஷாலிமார் சிறப்பு ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு
ADDED : மே 16, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம், ஷாலிமார் சிறப்பு ரயில், வரும் ஜூன் வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
* ஷாலிமார் - சென்ட்ரல் இடையே திங்கள்தோறும் மாலை 6:30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 19, 26, ஜூன் 2, 9, 16, 23, 30ம் தேதிகளில் நீட்டித்து இயக்கப்படும்
* சென்னை சென்ட்ரல் - ஷாலிமர் இடையே புதன்தோறும் அதிகாலை 4:30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 21, 28, ஜூன் 4, 11, 18, 25 மற்றும் ஜூலை 2லும் நீட்டித்து இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களில் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.