/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை - விஜயவாடா வந்தே பாரத் ரயில் நரசப்பூருக்கு நீட்டிப்பு
/
சென்னை - விஜயவாடா வந்தே பாரத் ரயில் நரசப்பூருக்கு நீட்டிப்பு
சென்னை - விஜயவாடா வந்தே பாரத் ரயில் நரசப்பூருக்கு நீட்டிப்பு
சென்னை - விஜயவாடா வந்தே பாரத் ரயில் நரசப்பூருக்கு நீட்டிப்பு
ADDED : நவ 12, 2025 10:27 PM
சென்னை, சென்னை சென்ட்ரல் - ஆந்திரா மாநிலம், விஜயவாடா வந்தே பாரத் ரயில், வரும் ஜன., 12 முதல் நரசப்பூருக்கு நீட்டிக்கப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரல் - ஆந்திரா மாநிலம் விஜயவாடாவுக்கு, வந்தே பாரத் ரயில் சேவை, 2023 செப்டம்பரில் துவங்கப்பட்டது. இந்த ரயிலுக்கு பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதற்கிடையே, பயணியரின் கோரிக்கையை ஏற்று,இந்த ரயிலை விஜயவாடா அருகே உள்ள நரசப்பூருக்கு நீட்டித்து இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, வரும் ஜன., 12 முதல் சென்ட்ரல் - விஜயவாடா வந்தே பாரத் ரயில், நரசப்பூருக்கு நீட்டித்து இயக்கப்படும். பயணியர் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.