/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆண்கள் சங்கம் போட்டி போராட்டம்: சோனா - சரண் விவகாரம்
/
ஆண்கள் சங்கம் போட்டி போராட்டம்: சோனா - சரண் விவகாரம்
ஆண்கள் சங்கம் போட்டி போராட்டம்: சோனா - சரண் விவகாரம்
ஆண்கள் சங்கம் போட்டி போராட்டம்: சோனா - சரண் விவகாரம்
ADDED : செப் 26, 2011 10:18 PM
சென்னை : பொய் புகார் தரும் நடிகைகளின் வீடுகளுக்கு முன், முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
சோனா - சரண் விவகாரத்தில், சோனாவுக்கு ஆதரவாக ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தினர், சரண் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து மகளிர் அமைப்பின் தலைவி கல்பனா கூறியதாவது, ''சோனா நடிகையாக இருந்தாலும், அவரும் ஒரு பெண். சோனாவிடம் மன்னிப்பு கேட்காவிட்டால், சரண் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்,'' என்று கூறினார். தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடிகைகள் உண்மையாகவே பாதிக்கப்பட்டிருந்தால், கோர்ட் மற்றும் போலீஸ் வாயிலாக தண்டனை பெற்றுத் தர முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து, தரகர்களை வைத்து பேச்சு வார்த்தை நடத்தி பணம் பறிக்கின்றனர். இதை ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்காக தனிப்பிரிவைத் துவங்கி, பொய் புகார் கொடுக்கும் நடிகைகள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலை தொடர்ந்தால், பொய் புகார் கொடுக்கும் நடிகைகளின் வீட்டு முன், ஆண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.