/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை அட்வகேட் பிரீமியர் லீக்: எழும்பூர் ராயல் ரேஞ்சர்ஸ் அணி வெற்றி
/
சென்னை அட்வகேட் பிரீமியர் லீக்: எழும்பூர் ராயல் ரேஞ்சர்ஸ் அணி வெற்றி
சென்னை அட்வகேட் பிரீமியர் லீக்: எழும்பூர் ராயல் ரேஞ்சர்ஸ் அணி வெற்றி
சென்னை அட்வகேட் பிரீமியர் லீக்: எழும்பூர் ராயல் ரேஞ்சர்ஸ் அணி வெற்றி
ADDED : செப் 06, 2025 12:30 AM
சென்னை :சென்னையில் நடந்த வழக்கறிஞர்களுக்கான டி - 20 கிரிக்கெட் போட்டியில், எழும்பூர் ராயல் ரேஞ்சர்ஸ் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை லா அசோசியேஷன் சார்பில், இரண்டாவது சென்னை அட்வகேட் பிரீமியர் லீக் டி - 20 கிரிக்கெட் போட்டி, மயிலாப்பூரில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளி மைதானத்தில், நேற்று துவங்கியது.
இதில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 12 அணிகள் பங்கேற்றுள்ளன.
முதல் போட்டியில், எழும்பூர் ராயல் ரேஞ்சர்ஸ் அணி, எஸ்.சி.சி., எனும் ஸ்மால் கேஸ் கோர்ட் கிரிக்கெட் கிளப் அணியை எதிர்த்து மோதியது.
இதில், முதலில் பேட்டிங் செய்த எஸ்.சி.சி., அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு, 134 ரன்கள் எடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரின்ஸ்லி 34, பரத் 24 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய எழும்பூர் ராயல் ரேஞ்சர்ஸ் அணி, 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. அணி வீரர்கள் ராஜ்குமார் 36, திருமலை 30 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினர்.
மற்றொரு போட்டியில் பீனிக்ஸ் பிளையர்ஸ் மற்றும் ரெட் டிராகன்ஸ் அணிகள் மோதின. இதில், பீனிக்ஸ் பிளையர்ஸ் அணி 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
எளிதான இலக்கை நோக்கி அடுத்து களமிறங்கிய ரெட் டிராகன்ஸ் அணி, மூன்று விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.