sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணி முடக்கம் நிதி நெருக்கடியால் நிறுத்தியது ஒப்பந்த நிறுவனம்

/

சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணி முடக்கம் நிதி நெருக்கடியால் நிறுத்தியது ஒப்பந்த நிறுவனம்

சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணி முடக்கம் நிதி நெருக்கடியால் நிறுத்தியது ஒப்பந்த நிறுவனம்

சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணி முடக்கம் நிதி நெருக்கடியால் நிறுத்தியது ஒப்பந்த நிறுவனம்


ADDED : அக் 27, 2025 02:59 AM

Google News

ADDED : அக் 27, 2025 02:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணிகள், ஒப்பந்த நிறுவனத்தின் நிதி நெருக்கடி காரணமாக முடங்கியுள்ளன. திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூரு செல்வதற்கு மதுரவாயலில் இருந்து காஞ்சிபுரம், வேலுார், கிருஷ்ணகிரி வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சாலை வழியாக, சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல, ஏழு மணி நேரம் ஆகிறது.

பயண நேரத்தை குறைக்கும் வகையில், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து சுங்குவார்சத்திரம், கோவிந்தவாடி, பாணாவரம், ராணிப்பேட்டை, ஒசகோட்டை வழியாக பெங்களூருக்கு செல்வதற்கு, அதிவிரைவு சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

இந்த சாலை அமைக்கப்பட்டால், சென்னையில் இருந்து நான்கு மணி நேரத்தில், பெங்களூரு சென்றடையலாம்.

ரூ.7,406 கோடி சாலை விரிவாக்க பணிக்காக, 2016ம் ஆண்டில், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நிலங்களை கையகப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, கட்டுமான பணிக்கு, 3,477 கோடி ரூபாய்; நிலம் கையகப்படுத்த, 3,929 கோடி ரூபாய் என, 7,406 கோடி ரூபாயை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒதுக்கியது.

முதற்கட்டமாக, கூத்தவாக்கம் ஏரி, மேபொடவூர், மணியாட்சி, கோவிந்தவாடி ஏரி ஆகிய இடங்களில் உயர்மட்டபாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

சித்துார் முதல் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் வரையில், 105 கி.மீ., சாலை போடும் பணி நடந்து வருகிறது. இதில், 76 கி.மீ., சாலை போடும் பணி நிறைவு பெற்று உள்ளது.

இதில், ஏரிகளில் சாலை போடும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், மகேந்திரவாடி, உளியநல்லுார் ஆகிய கிராமங்களில் துாண்கள் அமைக்கும் பணி அரைகுறையாக உள்ளது.

கிடப்பில் காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி, சிறுவாக்கம் ஆகிய பகுதிகளில் பாலங்கள் இணைப்பு ஏற்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ராணிப்பேட்டை மாவட்டம், மகேந்திரவாடி முதல் காஞ்சிபுரம் சிறுவாக்கம் வரையில், 23 கி.மீ.,க்கு அதிவிரைவு சாலை போடும் பணி முடங்கியுள்ளது. ஒப்பந்த நிறுவனத்திற்கு, 2026 மார்ச் வரை அவகாசம் வழங்கப்பட்டாலும், நிதி நெருக்கடியால் பணிகளை நிறுத்திவிட்டது.

புதிய நிறுவனத்தை தேர்வு செய்து, பணிகளை முடிப்பதற்கான பேச்சு டில்லியில் நடந்து வருகிறது. விரைவில் பணிகள் துவங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us