/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிலிப்பைன்ஸ் ரோல்பால் அணிக்கு சென்னை 'கோச்' அஸ்வின் பயிற்சி
/
பிலிப்பைன்ஸ் ரோல்பால் அணிக்கு சென்னை 'கோச்' அஸ்வின் பயிற்சி
பிலிப்பைன்ஸ் ரோல்பால் அணிக்கு சென்னை 'கோச்' அஸ்வின் பயிற்சி
பிலிப்பைன்ஸ் ரோல்பால் அணிக்கு சென்னை 'கோச்' அஸ்வின் பயிற்சி
ADDED : டிச 01, 2024 09:18 PM

சென்னை:கோவாவில், 4வது ஆசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி, இம்மாதம் 16ல் துவங்கி, 19ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா, பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன.
போட்டியில் பங்கேற்க உள்ள பிலிப்பைன்ஸ் அணிக்கான வீரர், வீராங்கனை தேர்வு மற்றும் பயிற்சி முகாம், பிலிப்பைன்ஸில் கடந்த 16ல் துவங்கி 26ம் தேதி வரை நடந்தது.
பிலிப்பைன்ஸ் ரோல்பால் சங்கம் சார்பில் நடந்த இப்பயிற்சி முகாமில், வீரர்களை தேர்வு செய்து, பயிற்சி அளிக்க இந்தியா சார்பில் பயிற்சியாளரை அனுப்ப, இந்திய ரோல்பால் சங்கத்திற்கு, பிலிப்பைன்ஸ் ரோல்பால் சங்கம் கேட்டுக்கொண்டது.
அதன்படி, இந்திய ரோல்பால் சங்கம் சார்பில், சென்னையைச் சேர்ந்த 'ஓட்டோ கோச்' நிறுவனர் அஸ்வின் மகாலிங்கம், இந்திய பயிற்சியாளராக, பிலிப்பைன்ஸ் பயிற்சி முகாமில் பங்கேற்றார்.
முகாமில் தேர்வான 12 பேரும் பிலிப்பைன்ஸ் அணிக்காக ஆசிய போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
முகாமில், பிலிப்பைன்ஸ் ரோல்பால் சங்க தலைவர் பாஸ்டர் டோனி ஆர்டேகா, பொது செயலர் மரியன் எலைன் ஆர்.டி சாவேஸ், பிலிப்பைன்ஸ் அணி பயிற்சியாளர் ஜெபர்சன் செனெரெஸ், அணியின் கேப்டன் ஜெய்சன் செனெரஸ் உள்ளிட்டோர் இருந்தனர்.
அஷ்வின் மகாலிங்கம் கூறுகையில், ''இந்தியாவில் அறிமுகமான ரோல்பால் விளையாட்டு, பல்வேறு நாடுகளில் பிரபலமாகி வருகிறது. இந்தியா சார்பில், பிலிப்பைன்ஸில் பயிற்சியாளராக பங்கேற்றது பெருமையாக உள்ளது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பைக்கான ரோல்பால் போட்டிக்கும், வீரர்கள் தயார் செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்,'' என்றார்.