/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை:புகார் பெட்டி;வேகத்தடை இல்லாததால் கான்வென்ட் சாலையில் விபத்து

ADDED : நவ 04, 2024 04:40 AM

அண்ணா நகர் மண்டலம், செனாய் நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகில், கான்வென்ட் சாலை உள்ளது. செயின்ட் ஜார்ஜ் பள்ளியின் அருகில் உள்ள இச்சாலை, டி.பி., சத்திரம் மற்றும் கல்லறை சாலையை இணைக்கிறது.
வீட்டுவசதி வாரிய குடிருப்பு, டி.பி.,சத்திரம் சந்தை என, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன், இச்சாலை புதுப்பிக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையில், ஒரு வேகத்தடை கூட இல்லை. இதனால் இச்சாலையில் தினமும் விபத்து ஏற்படுகிறது.
இவ்விபத்துகள் குறித்து, சேத்துப்பட்டு காவல் நிலையம், அண்ணா நகர் மண்டல அலுவலகத்தில் பல முறை கோரிக்கை மனுவும், புகார் மனும் அளித்தோம். பல முயற்சிக்கு பின், சேத்துப்பட்டு போலீசில் தடையில்லா சான்று வழங்கிய நிலையில், மாநகராட்சி அலட்சியம் காட்டுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, உயிர்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- ஜாகீர் உசேன், செனாய் நகர்.