/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மிரட்டி வீட்டை அபகரித்ததாக தி.மு.க., கவுன்சிலர் மீது புகார்
/
மிரட்டி வீட்டை அபகரித்ததாக தி.மு.க., கவுன்சிலர் மீது புகார்
மிரட்டி வீட்டை அபகரித்ததாக தி.மு.க., கவுன்சிலர் மீது புகார்
மிரட்டி வீட்டை அபகரித்ததாக தி.மு.க., கவுன்சிலர் மீது புகார்
ADDED : ஆக 03, 2011 01:19 AM
சென்னை : தி.மு.க., கவுன்சிலர் மற்றும் சிலர், வீட்டை அபகரித்துக் கொண்டதாக வீட்டு உரிமையாளர், ஏழு கிணறு போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை, கொருக்குப்பேட்டை, வெங்கட்ராமன் தெருவைச் சேர்ந்தவர் நாகசுப்ரமணியன், 33. இவருக்கு சொந்தமாக, இதே பகுதியில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டில், அழகேசன், 40 மற்றும் அவரது மனைவி வளர்மதி, 37 ஆகியோர் குழந்தையுடன் வாடகைக்கு குடியேறினர். சில மாதங்களில், வளர்மதியை விட்டுவிட்டு, வேறு ஒரு பெண்ணுடன் அழகேசன் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. கணவன், பிரிந்து சென்ற நிலையில், குழந்தையுடன் வீட்டில் தங்கியிருந்த வளர்மதியை, வீட்டை காலி செய்யுமாறு நாகசுப்ரமணியன் கூறினார். ஆனால், வளர்மதி காலி செய்ய மறுத்து வந்தார்.
தொடர்ந்து, வளர்மதிக்கு, நாக சுப்ரமணியன் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததை அடுத்து, வீட் டை காலி செய்துள் ளார். இதற்கிடையில், வளர்மதியின் தந்தையும், அப்பகுதியில் உள்ள தி.மு.க., பிரமுகரும், ரவுடியுமான, பேண்டு சுந்தரம் என்பவர், ஏழு கிணறு போலீசில், தன் மகள் வளர்மதியை காணவில்லை என்றும், அவரை நாகசுப்ரமணியன் கடத்திவிட்டதாகவும் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், புகார் பொய்யானது என்பதும், வளர்மதி தானாகவே வீட்டை காலி செய்து விட்டு, வேறு இடத்திற்குச் சென்றதும் தெரியவந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், அழகேசன், வளர்மதி, பேண்டு சுந்தரம் மற்றும் தி.மு.க., கவுன்சிலர் புகழேந்தி ஆகியோர் திடீரென, அழகேசன் குடியிருந்த நாகசுப்ரமணியத்தின் வீட்டிற்குச் சென்று, பூட்டை உடைத்து குடியேறினர். இது தொடர்பாக, கேட்கச் சென்ற, நாகசுப்ரமணியத்தை அடித்து விரட்டினர்.இதுகுறித்து, ஏழு கிணறு போலீசில் நாகசுப்ரமணியன் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.