sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநகராட்சி பகுதியில் 40 கோடி ரூபாய்க்கு சாலைகள் புதுப்பித்தல்

/

மாநகராட்சி பகுதியில் 40 கோடி ரூபாய்க்கு சாலைகள் புதுப்பித்தல்

மாநகராட்சி பகுதியில் 40 கோடி ரூபாய்க்கு சாலைகள் புதுப்பித்தல்

மாநகராட்சி பகுதியில் 40 கோடி ரூபாய்க்கு சாலைகள் புதுப்பித்தல்


ADDED : ஆக 07, 2011 12:56 AM

Google News

ADDED : ஆக 07, 2011 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள சாலைகள் புதுப்பிக்கப்படுகின்றன.

இதற்காக, 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, டெண்டர் கோரப்பட்டுள்ளது.அக்டோபர் மாதத்தில் தொடங்கும், வடமேற்கு பருவ மழைக்கு முன், சாலை புதுப்பிப்பு பணிகளை முடிக்க திட்டமிட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாநகராட்சியின், 10 மண்டலங்களில், டெண்டர் விடப்பட்ட சாலைகளில், புதுப்பித்தல் மற்றும் சீரமைப்பு ஆகிய இரண்டு வகைகளில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதுள்ள, விடப்பட்டுள்ள பணிகள் தவிர, மேலும், 24 கோடி ரூபாய்கான பணிகளுக்கு டெண்டர் விடப்படும் எனத் தெரிகிறது.புதுப்பித்தல்: தற்போதுள்ள சாலைகளுக்கு மேல், புதிய சாலைகள் அமைக்கப்படுவதால், அதன் உயரம் அதிகரித்து, கட்டடங்களின் அடித் தளங்களுக்கு மேல், சாலை உயரம் அதிகரித்துள்ளது.



இதனால், மழை காலங்களில் மழை நீர், கட்டடங்களுக்குள் சென்று விடுகிறது என புகார் எழுந்தது. இதையடுத்து, சாலைகளைத் தோண்டி, மீண்டும் அமைக்கும், புதுப்பிக்கும் பணிகள் நடக்கின்றன.புதுப்பித்தல் பணிக்காக, ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணையுடன் கமிட்டி அமைக்கப்பட்டு, ஆலோசனைகளும், தொழில்நுட்பங்களும் பெறப்படும் என, மாநகராட்சியால் உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதுவரை கமிட்டி எதுவும் அமைக்கவில்லை. அதே சமயத்தில் கட்டடங்களின் அடித்தளத்துக்கு மேல், உயரமாக உள்ள சாலைகளைத் தோண்டி, மீண்டும் அமைக்கும், புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. புதுப்பித்தல் பணிக்காக, 24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 18 பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.புதுப்பித்தல் பணியைத் தவிர, சாலைகளை சீரமைக்கும் பணிக்காக, 22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 22 பணிகள் நடக்கின்றன. சீரமைப்புப் பணியில், தற்போதுள்ள சாலைகளின் மேல், புதிதாக சாலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த சாலைகளின் உயரம், கட்டடங்களுக்கு மேல் செல்லாமல் உள்ளதால், சாலைகளுக்கு மேல் புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றன.இரவு நேரத்தில் பணி: சாலைகள் அமைக்கும் பணிகள், போக்குவரத்தை பாதிக்காமல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.



இரவு 12 மணி முதல், அதிகாலை 5 மணிக்குள் சாலை அமைக்கும் பணியை முடிக்குமாறு, ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.இரவு நேரத்தில் பணிகளைச் செய்வதால், பணியாளர்களுக்கு இருமடங்கு கூலி அளிப்பதால், டெண்டர் தொகையில், 10 சதவீதம் உயர்த்தித் தருமாறு ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சியைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.மாநகராட்சிப் பகுதியில், சீரமைக்க வேண்டிய மீதமுள்ள சாலைகளுக்கும், விரைவில் டெண்டர் விடப்படுகிறது. இதில், 20க்கும் மேற்பட்ட பணிகளுக்கு, 20 கோடி ரூபாயில் டெண்டர் கோரப்பட உள்ளன, என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










      Dinamalar
      Follow us