/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
"பிக்னிக்' ஓட்டல் பகுதியை கைப்பற்றுகிறது மாநகராட்சி
/
"பிக்னிக்' ஓட்டல் பகுதியை கைப்பற்றுகிறது மாநகராட்சி
"பிக்னிக்' ஓட்டல் பகுதியை கைப்பற்றுகிறது மாநகராட்சி
"பிக்னிக்' ஓட்டல் பகுதியை கைப்பற்றுகிறது மாநகராட்சி
ADDED : செப் 22, 2011 12:24 AM
சென்னை : ''சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, 'பிக்னிக்' ஓட்டல் பகுதியை, இன்னும் மூன்று வாரங்களுக்குள், மாநகராட்சி கையகப்படுத்தும்,'' என, உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பகுதியில், ரிப்பன் கட்டடம் அருகே, 13 கிரவுண்ட் பகுதியில், 'பிக்னிக்' ஓட்டல் அமைந்துள்ளது. விக்டோரியா ஹால் அறக்கட்டளைக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்ட பகுதியில், அறக்கட்டளை சார்பில், உள் குத்தகைக்கு ஐந்து கிரவுண்ட் நிலம், 'பிக்னிக்' ஓட்டல் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. இப்பகுதியில், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், 'பிக்னிக்' ஓட்டல்கட்டப்பட்டது. அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை, வியாபார நோக்குடன் உள் குத்தகைக்கு வழங்கப்பட்டது செல்லாது என, மாநகராட்சி அறிவித்தது. இதை எதிர்த்து, 'பிக்னிக்' ஓட்டல் நிர்வாகம் சென்னை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், 'பிக்னிக்' ஓட்டல் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன், உள்குத்தகைக்கு வழங்கப்பட்ட இடத்தை, மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. இதையடுத்து, 'பிக்னிக்' ஓட்டல் பகுதியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இது குறித்து மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை ஐகோர்ட் உத்தரவை அடுத்து, 'பிக்னிக்' ஓட்டல் பகுதியை மாநகராட்சி வசம் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ள இருந்த நிலையில், ஓட்டல் நிர்வாகம், சுப்ரீம் கோர்ட்டை அணுகியது. ஆனால், சுப்ரீம் கோர்ட், 'மாநகராட்சிக்கு சொந்தமான பகுதியை தனியார் கட்டுப்பாட்டிற்குள் வைக்க அனுமதிக்க முடியாது. எனவே, அடுத்த மூன்று வாரத்திற்குள், ஓட்டல் அமைந்துள்ள பகுதியை, மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது. எனவே, ஓட்டல் அமைந்துள்ள பகுதி, மூன்று வாரங்களுக்குள், மாநகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் வரும். சென்னையில் தற்போது அமல்படுத்தப்பட்டு வரும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அப்பகுதி ஒதுக்கப்படும். பூமிக்கு அடியில், ரயில் பாதை அமைக்கும் பணிக்கு, அப்பகுதியில் காற்று வெளியேற மிகப்பெரிய வழி ஏற்படுத்தப்பட உள்ளது. இதுதவிர, மாநகராட்சி நிர்வாக அலுவலகங்களுக்கும், தற்போது ஓட்டல் அமைந்துள்ள பகுதி, பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.