/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நள்ளிரவில் டூவீலர்கள் எரிப்பு: மர்ம நபர்கள் கைவரிசை?
/
நள்ளிரவில் டூவீலர்கள் எரிப்பு: மர்ம நபர்கள் கைவரிசை?
நள்ளிரவில் டூவீலர்கள் எரிப்பு: மர்ம நபர்கள் கைவரிசை?
நள்ளிரவில் டூவீலர்கள் எரிப்பு: மர்ம நபர்கள் கைவரிசை?
ADDED : செப் 22, 2011 12:24 AM
கொரட்டூர் : வீடுகளுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர்கள், நள்ளிரவில் மர்மமான முறையில் எரிந்தன.
சென்னை, கொரட்டூர் ஜெகதாம்பிகை நகர், யாதவாள் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு மற்றும் தணிகாசலம் தெரு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் நாகராஜ், 30, உதயகுமார், 20, ராஜன், 32, குணசேகர், 35, கேசவன், 30, மற்றும் செல்வராஜ், 28. இவர்கள், நேற்று முன்தினம் இரவு, தங்களுக்குச் சொந்தமான டூவீலர்களை, வீடுகளுக்கு முன் நிறுத்தியிருந்தனர். நேற்று அதிகாலை, அவர்கள் வெளியில் வந்து பார்த்த போது, நான்கு டூவீலர்கள் முழுவதுமாக எரிந்து கிடந்தன. இரு டூவீலர்களுக்கு லேசான சேதம் ஏற்பட்டிருந்தது. இது பற்றி கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். நள்ளிரவு 1 மணிக்கு மேல், மேற்கண்ட பகுதிகளில் வலம் வந்த மர்ம நபர்கள் டூவீலர்களை எரித்துள்ளனர். தொழில் போட்டி, முன்விரோதம் காரணமாக எரித்தார்களா என்று, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆறேழு மாதங்களுக்கு முன், கொரட்டூர் பகுதியில், ஒரு கார் மற்றும் இரண்டு டூவீலர்களும், திருமுல்லைவாயலில் ஒரு டூவீலரும், மர்மமான முறையில் எரிந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜ்பவன் அருகே கார்களுக்கு தீ வைப்பு: சென்னை, கிண்டி ராஜ்பவன் அருகே, ராஜ்பவன் காலனி உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு, ஒரு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதே சமயம், காலனியின் எதிரேயுள்ள குதிரை லாயத்தில் இருந்த இரண்டு கார்களின் கவர்கள், தீப்பிடித்து எரியத் தொடங்கின. காவலாளிகள், கார் கவரை அகற்றி, காருக்கு அதிக சேதாரம் இல்லாமல் காப்பாற்றினர். ராஜ்பவன் காலனியில் தீப்பிடித்த கார் மட்டும், எலும்புக்கூடாக மாறியது.