/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நில மோசடி தொடர்பாக... 1,101 புகார்கள் : பைசல் செய்யப்பட்டது 703
/
நில மோசடி தொடர்பாக... 1,101 புகார்கள் : பைசல் செய்யப்பட்டது 703
நில மோசடி தொடர்பாக... 1,101 புகார்கள் : பைசல் செய்யப்பட்டது 703
நில மோசடி தொடர்பாக... 1,101 புகார்கள் : பைசல் செய்யப்பட்டது 703
ADDED : நவ 29, 2011 09:19 PM
நில மோசடி மற்றும் அபகரிப்பு தொடர்பாக, சென்னையில் 1,101 புகார்கள் கடந்த ஆறு மாதங்களில் பதிவாகியுள்ளன.
இதில், 703 புகார்கள் பைசல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் நில மோசடி புகார்களை விசாரிக்க, போலீசில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. புகார் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மாநில தலைமையகத்தில் ஒரு பிரிவு, போலீஸ் கமிஷனரகங்களில் தலா ஒரு பிரிவு, 28 மாவட்டங்களிலும் தலா ஒரு பிரிவு என, 36 நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுகள் அமைக்கப்படும் என்று, போலீசார் தெரிவித்தனர்.
புறநகர் பகுதி புகார் குவியல் சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஏற்கனவே நில மோசடி பிரிவு செயல்பட்டது. முதல்வர் அறிவிப்பையொட்டி, புதிய அமைப்பு முறையில் போலீசார் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவை, சென்னை மாநகர போலீசார் அமைத்து, அதிகாரிகளையும் நியமித்தனர். புறநகர் போலீஸ் கமிஷனரகம், சென்னை போலீசுடன் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து, நில மோசடி தொடர்பான புகார்கள் குவிந்துள்ளன. இங்கும் தி.மு.க.,வினர் நொளம்பூர் பகுதியில் நடந்த நிலமோசடி தொடர்பாக, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன், அவரது உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வடபழனியில் ஒரு பெண் நிலத்தை ஆக்கிரமித்தது, நெசப்பாக்கம் பகுதியில் நிலத்தை ஆக்கிரமித்தது உள்ளிட்ட புகாரின்படி, கே.கே.நகர் பகுதி தி.மு.க., வட்டச் செயலர் தனசேகரன் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தவிர, தி.மு.க., வைச் சேர்ந்த எம்.எல். ஏ.,க்கள், மாஜிக்கள் மீதும் புகார்கள் உள்ளன. விசாரணை அடிப்படையில் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இட்டுக் கட்டிக் கொடுக்கப்படும் புகார்களை அடிப்படை ஆவணங்களின் உண்மை நிலையை சரிபார்த்து நடவடிக்கையை கைவிடுகின்றனர்.
கிழக்கு சென்னையில் அதிகபட்சம் : அதிகபட்சமாக கிண்டி, மவுன்ட், தாம்பரம், அடையாறு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நில மோசடி தொடர்பாக 248 புகார்கள் வந்துள்ளன. அடுத்தபடியாக, அம்பத்தூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய போலீஸ் மண்டலத்தில் 182 புகார்கள் பதிவாகியுள்ளன. சில முக்கிய புகார்கள், மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளன. மத்திய குற்றப் பிரிவில், கடந்த 11 மாதங்களில் 510 புகார்கள் பதிவு செய்யப்பட்டள்ளன. இதில், 250 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்படியெல்லாம் மோசடி : நில மோசடி, நில அபகரிப்பு தொடர்பாக தினுசு தினுசான புகார்கள் சென்னையில்
பதிவாகியுள்ளன. குறிப்பாக, வெளிநாட்டில் இருப்பவர்களது நிலம் அதிகளவில், ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அதிகாரத்தை பயன்படுத்தி, கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில், முக்கிய பிரமுகர்கள் நில ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். நிலப் பிரச்னை தொடர்பான விவகாரங்களில் சமரசத்துக்கு அழைத்து, பேச்சு நடத்துவது போல, இடத்தை வளைத்த சம்பவங்களும் நடந்துள்ளதாக புகார்களில் உள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த சிலருக்கு ஒரு காலி நிலத்தைக் காட்டி, வேறு ஒருவரது நிலத்தை பதிவு செய்து கொடுத்ததும் பதிவாகியுள்ளது. போலி பவர் பத்திரம், போலி உயில் ஆவணம் மற்றும் போலி செட்டில்மென்ட் பத்திரங்கள் மூலம் நடந்த மோசடிகளும் ஏராளம்.
- கி.கணேஷ் -