தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மேம்பால ரயில் நிலையங்களில் இரும்பு பொருட்கள் திருட்டு

மேம்பால ரயில் நிலையங்களில் இரும்பு பொருட்கள் திருட்டு

மேம்பால ரயில் நிலையங்களில் இரும்பு பொருட்கள் திருட்டு


ADDED : ஜூலை 23, 2012 10:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2012 10:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : சிந்தாதிரிப்பேட்டை உட்பட, ஐந்து மேம்பால ரயில் நிலையங்களில் இருந்து, இரும்பு ஜன்னல் கம்பிகள் திருடப்படுவதும், கண்ணாடிகளை உடைப்பதும் தொடர்கிறது.

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே, மேம்பால ரயில் போக்குவரத்தில், 17 நிலையங்கள் உள்ளன.

தொடரும் திருட்டுகள்இதில், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம் மற்றும் கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையங்களில் இருந்து, விஷமிகள் சிலர், ஜன்னல் கம்பிகளை உடைத்து எடுத்துச் செல்வது, கண்ணாடிகளை உடைப்பது என, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீசார் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்ட பின்,

இந்நிலை குறைந்திருந்தது.

ஆனால், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம் ரயில் நிலையங்களில், இரும்புக் கம்பிகளை உடைத்து எடுத்துச் செல்வது மற்றும் மாடிப் படிக்கட்டுப் பகுதியில் உள்ள இரும்பு மற்றும் அலுமினிய தகடுகளை திருடர்கள் உடைத்து

எடுத்துச்செல்வது மட்டும்

தொடர்கிறது. சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில், ஜன்னல் கம்பிகளும், தடுப்பு சுவரில் உள்ள ஜன்னல் கம்பிகள் மற்றும் நுழைவுப் பாதையில் உள்ள இரும்பு கதவில் உள்ள கம்பிகளும் இரவு நேரத்தில் திருடர்கள் மூலம் கொஞ்சம், கொஞ்சமாக உடைத்து எடுத்துச்செல்வது தொடர்கிறது.

இதனால், நிலையத்தின் முன்பகுதி, தடுப்பு சுவர் பகுதியிலும், பாதுகாப்பு சுற்றுச்சுவர் பகுதியிலும் உள்ள ஜன்னல்கள் கம்பிகள் இன்றி, அலங்கோலமாக உள்ளன.

கூடுதல் பாதுகாப்பு தேவை

இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், ''நிலையத்தில் இரவு நேரத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர், பிளாட்பாரத்தில் மட்டுமே பாதுகாப்புப் பணியில் இருக்கின்றனர்.

நிலையத்திற்கு கீழே அவ்வளவாக வருவதில்லை. இரவு 11.00 மணிக்கு மேல் ரயில் போக்குவரத்து முடிந்து விடுகிறது. அதன் பின், சாலைகளில் சுற்றித்திரியும், 'குடிமகன்'கள் மற்றும் திருடர்கள், இரும்பு ஜன்னல் கம்பிகளை உடைத்து எடுத்துச்சென்று விடுகின்றனர்.

சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் போலீஸ் நிலையம் இருக்கும் நிலையிலும், திருட்டு குறைந்தபாடில்லை. ரயில்வே போலீசார், பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால், இதுபோன்ற திருட்டு தடுக்கப்படும்,'' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us