sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சென்னை மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை... 40.15 லட்சம்! புதிதாக 49,159 பேர் பட்டியலில் சேர்ப்பு

/

சென்னை மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை... 40.15 லட்சம்! புதிதாக 49,159 பேர் பட்டியலில் சேர்ப்பு

சென்னை மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை... 40.15 லட்சம்! புதிதாக 49,159 பேர் பட்டியலில் சேர்ப்பு

சென்னை மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை... 40.15 லட்சம்! புதிதாக 49,159 பேர் பட்டியலில் சேர்ப்பு


ADDED : ஜன 07, 2025 12:22 AM

Google News

ADDED : ஜன 07, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை சென்னை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், 49,159 இளம் வாக்காளர்கள் உட்பட, 40.15 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான குமரகுருபரன் கூறியதாவது:

சென்னை மாவட்டத்தின் 16 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், 2025ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியல், கடந்தாண்டு அக்., 29ம் தேதி வெளியிடப்பட்டன.

கடந்த, 1ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக, பொதுமக்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலைய அலுவலரால், நேரடி ஆய்வுக்கு பின், தொகுதியை சார்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால், படிவங்கள் ஏற்பு அல்லது நிராகரிப்பு குறித்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

ஏற்கப்பட்ட படிவங்கள் அடிப்படையில், 2025ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு அக்., 29ம் தேதி வெளியிட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 19 லட்சத்து, 41,271 ஆண் வாக்காளர்கள்; 20 லட்சத்து, 9,975 பெண் வாக்காளர்கள், 1,252 இதர வாக்காளர்கள் என, 39 லட்சத்து, 52,498 பேர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த சுருக்க திருத்தம் தொடர்பாக, 45,134 ஆண்கள்; 51,328 பெண்கள்; 42 மூன்றாம் பாலினத்தவர் என, 96,504 பேர் சேர்த்தலுக்கு விண்ணப்பித்தனர்.

பரிசீலனைக்கு பின், 44,974 ஆண்கள்; 51,168 பெண்கள்; 42 மூன்றாம் பாலினத்தவர் என, 96,184 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களது கள ஆய்வின்போது கண்டறியப்பட்ட இடம் பெயர்ந்தோர், காலமானோர், வாக்காளர் பட்டியல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளில் இடம் பெற்றவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் பெயர் நீக்கம் செய்ய கோரி, 32,964 விண்ணப்பங்கள் வந்தன.

அவற்றில், இறந்த 1,752 பேர் மற்றும் 30,717 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் என, 32,804 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, சென்னை மாவட்ட பட்டியல்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தன்னிச்சையாக எந்தவொரு நபரும் நீக்கம் செய்யப்படவில்லை.

வரைவு வாக்காளர் பட்டியலைவிட தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், 63,380 பேர் கூடுதலாக இடம் பெற்றுள்ளனர். 18 வயதை கடந்த, 49,159 இளம் வாக்காளர்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் எண்ணிக்கை குறைந்தபட்சமாக, துறைமுகம் சட்டசபை தொகுதியில், 1 லட்சத்து, 78,980 பேரும், அதிகபட்சமாக வேளச்சேரியில் 3 லட்சத்து, 16,642 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டசபை வாரியாக வாக்காளர் விபரம்!

தொகுதிகள் - ஆண்கள் - பெண்கள் - மூன்றாம் பாலினத்தவர் - மொத்தம்ஆர்.கே.நகர் - 1,20,727 - 1,30,082 - 121 - 2,50,930பெரம்பூர் - 1,45,072 - 1,50,696 - 92 - 2,95,860கொளத்துார் - 1,40,790 - 1,48,074 - 73 - 2,88,937வில்லிவாக்கம் - 1,19,733 - 1,24,730 - 65 - 2,44,528திரு.வி.க.நகர் - 1,08,105 - 1,14,547 - 75 - 2,22,727எழும்பூர் - 96,546 - 98,535 - 70 - 1,95,151ராயபுரம் - 96,217 - 1,00,745 - 73 - 1,97,035துறைமுகம் - 92,615 - 86,296 - 69 - 1,78,980சேப்பாக்கம்/திருவல்லிக்கேணி - 1,17,597 - 1,22,180 - 63 - 2,39,840ஆயிரம்விளக்கு - 1,16,363 - 1,21,998 - 114 - 2,38,475அண்ணாநகர் - 1,37,140 - 1,43,248 - 102 - 2,80,490விருகம்பாக்கம் - 1,42,634 - 1,44,692 - 91 - 2,87,417சைதாப்பேட்டை - 1,34,153 - 1,39,382 - 88 - 2,73,623தி.நகர் - 1,15,975 - 1,19,588 - 53 - 2,35,616மயிலாப்பூர் - 1,30,527 - 1,39,055 - 45 - 2,69,627வேளச்சேரி - 1,56,085 - 1,60,475 - 82 - 3,16,642மொத்தம் - 19,70,279 - 20,44,323 - 1,276 - 40,15,878



பட்டியலை எங்கு பார்க்கலாம்?

தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை, மாநகராட்சி உதவி கமிஷனர் அலுவலகங்கள், ஓட்டுச்சாவடி மையங்கள் மற்றும் http://voter.eci.gov.in இணையதளத்தில் பார்க்கலாம்.








      Dinamalar
      Follow us