/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச செஸ் போட்டி சென்னை சிறுமி சாதனை
/
சர்வதேச செஸ் போட்டி சென்னை சிறுமி சாதனை
ADDED : டிச 10, 2025 05:57 AM

சென்னை: ஸ்பெயின் நாட்டில் நடந்த சர்வதேச செஸ் போட்டி யில், சென்னையை சேர்ந்த சிறுமி சார்வி, 11, மிகக் குறைந்த வயதில், 'பெண் சர்வதேச மாஸ்டர்' என்ற தகுதியை பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஸ்பெயினின் பெனிடார்ம் நகரில், 22-வது ஓபன் சர்வதேச செஸ் தொடர் நடந்தது. இதன் ரேபிட் சுற்றில், முதல் முறையாக இந்தியா சார்பில், சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி சார்வி களம் இறங்கினார்.
இத்தொடரில் அபாரமாக விளையாடிய சார்வி, 'பெண் சர்வதேச மாஸ்டர்' தகுதியை வென்று அசத்தினார். அதனால், கத்தார் நாட்டின் தோஹாவில், வரும் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடக்க உள்ள உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பன்கேற்க, சார்வி தேர்வாகியுள்ளார்.

