ADDED : ஏப் 03, 2026 05:34 PM
- ஆன்மிகம் - கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழா விடையாற்றி உற்சவத்தில் ,'எல்லாம் இன்புற்றிருக்க' எனும் தலைப்பில் சுவாமிநாதன் சொற்பொழிவு-மாலை 5:00 மணி. அபிஷேக் ரகுராமின் கர்நாடக இசை நிகழ்சி-மாலை 6:30. இடம்: மயிலாப்பூர்.
அஷ்ட சித்தி விநாயகர் கோவில் ராம நவமி மஹோத்சவத்தில் சங்கரராம தீக் ஷிதரின் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் 'சுந்தர காண்டம்' உபன்யாசம் - மாலை 6:30 - 8:30 மணி. இடம்: வித்யா லட்சுமி தெரு, ராஜேஸ்வரி நகர், சேலையூர்.
வடபழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழாவில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி- புறப்பாடு - -இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.
பார்த்தசாரதி கோவில் நரசிம்மர் சின்னமாடவீதி புறப்பாடு- - மாலை 5:30 மணி. பெரியாழ்வார் ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
மகா சக்தி கணபதி கோவில் மகா கும்பாபிஷேகம். கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள். தனபூஜை, கோபூஜை -- காலை 8:00 மணி. முதல் கால யாகசாலை பூஜை -- மாலை 5:00 மணி. இடம்: ராஜ்பாய் நகர், ஆவடி.
திருநீலகண்டேஷ்வரர் கோவில் நால்வர் நற்பணி மன்றத்தின் சார்பில் காரைக்கால் அம்மையார் குருபூஜை -- மாலை 6:00 மணி. இடம்: கீழ்க்கட்டளை.
ஆதிபுரீஸ்வரர் கோவில் காரைக்கால் அம்மையார் குருபூஜை -- இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
சீனிவாச பெருமாள் கோவில் கம்ப ராமாயண சொற்பொழிவு: புலவர் அரங்கராசன் -- மாலை 6:30 மணி இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
அர்க்கீஸ்வரர் கோவில் காரைக்கால் அம்மையார் குருபூஜை -- மாலை 5:30 மணி. இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.
- பொது -
சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி நவீன உற்பத்தி துறை சார்ந்த இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் கண்காட்சி - -காலை 9:30 மணி முதல். இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
பர்னீச்சர் கண்காட்சி வீட்டிற்கு தேவையான அனைத்து வகை பர்னீச்சர் பொருட்கள் கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
* சமஸ்கிருத கல்லுாரி
ராமாயணத்தின் விழுமியங்கள் சொற்பொழிவு: ராமானும்ஜி - மாலை 6:00 மணி. இடம்: ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர்.
