ADDED : ஏப் 11, 2026 05:08 PM
ஆன்மிகம்
* கபாலீஸ்வரர் கோவில்
கும்பாபிஷேக திருநட்சத்திரத்தை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு 1,008 சங்காபிஷேகம், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் யதாஸ்தானம் எழுந்தருளல் - காலை 11:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
* பார்த்தசாரதி பெருமாள் கோவில்
பார்த்தசாரதி பெருமாள் பெரியமாட வீதி புறப்பாடு - மாலை 5:00 மணி. பிள்ளைலோகச்சார் ஆஸ்தானம் - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* வட்டப்பாறையம்மன் உத்சவம்
மூன்றாம் நாளில், வட்டப்பாறையம்மன் உத்சவம்: தாயார், விருக் ஷி பூ மாலை அணிந்து, புஷ்ப விமானத்தில் எழுந்தருளி மாடவீதி உத்சவம் - இரவு, 7:00 மணி - தேரடி, திருவொற்றியூர்.
பொது
* 'புரோ வேவ்' கண்காட்சி
தொழில் முறை ஒலி, ஒளி, ஆடியோ விஷுவல் மற்றும் இசை தயாரிப்பு தொழில்நுட்பங்கள் கொண்ட, 'புரோ வேவ்' கண்காட்சி - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
* வாசிக்கலாம் வாங்க
புத்தக வாசிப்பை நேசிப்போரை ஒரே இடத்தில் சேர்க்கும் வகையிலான, 'வாசிக்கலாம் வாங்க' நிகழ்ச்சி - காலை7:30 மணி. உட்லேண்ட் டிரைவ்- இன், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம்.
* கர்நாடக இசைக்கச்சேரி
தாம்பரம் ஆஸ்திக சபா, நிகழ்த்துபவர்கள்: புல்லாங்குழல் - ஸ்ரீதர், வயலின் - பூர்ணிமா ரவிசங்கர், மிருதங்கம் - ரங்கநாதன். நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி, கிழக்கு தாம்பரம்.
* கோவில் துாய்மை பணி
தேசிய ஹிந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன் நடத்தும் கோவில் துாய்மை பணி - - காலை 7:00 மணி முதல். இடம்: ரத்ன விநாயகர் - துர்க்கை அம்மன் கோவில், ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை. துலுக்காணத்தம்மன் கோவில், சோழிங்கநல்லுார்.
* வினைதீர்த்த விநாயகர் கோவில்
குமரவேல் தலைமையில் கயிலாய வாத்திய பயிற்சி - காலை 10:00 மணி. இடம்: பிரதான சாலை, பள்ளிக்கரணை.
