ADDED : ஏப் 13, 2026 10:53 PM
--------
ஆன்மிகம்
--------
* கபாலீஸ்வரர் கோவில்
விடையாற்றி கலை விழாவில் அர்ச்சனா மகேஷின் பரதநாட்டிய நிகழ்ச்சி -- -மாலை 6:30 மணி. தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசித்தல்- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
***
* பார்த்தசாரதி கோவில்
உடையவர் பல்லக்கு புறப்பாடு- - காலை 7:00 மணி. பேயாழ்வார் திருநட்சத்திர விழா- - மாலை 3:00 மணி. உடையவர் வெள்ளி சிம்ம வாகன புறப்பாடு - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
***
* அஷ்டலட்சுமி கோவில்
புத்தாண்டை முன்னிட்டு திருமஞ்சனம்- - காலை 8:00 மணி. ண்டு பஞ்சாங்கம் வாசித்தல் - -காலை 10:00 மணி. இடம்: பெசன்ட்நகர்.
***
* வட்டப்பாறையம்மன் உத்சவம்
ஐந்தாம் நாளில் வட்டப்பாறை உத்சவ அம்மன், செவ்வரளி பூ மாலை அணிந்து, சவுடால் விமானத்தில் மாடவீதி உற்சவம் - இரவு 7:00 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.
***
* தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில்
விஷு கனி காணும் நிகழ்வு -- காலை 6:00 முதல் 11:00 மணி வரை. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகம், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
***
* சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
சிறப்பு சொர்ண அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 5:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் - மாலை 5:30 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
***
* திருநீலகண்டேஸ்வரர் கோவில்
பாலாபிஷேகம் -- காலை 5:00 மணி. சுவாமி வீதியுலா -- காலை 6:30 மணி. சிறப்பு அபிஷேகம் -- காலை 10:30 மணி. மகா தீபாராதனை -- மாலை 6:00 மணி. இடம்: கீழ்க்கட்டளை.
***
* நாகேஸ்வர சுவாமி கோவில்
நடராஜன் ஷியாம்சுந்தரின் பெரியபுராண சொற்பொழிவு --- மாலை 6:45 மணி. இடம்: குன்றத்துார்.
***
* அபயம்
பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம கீர்த்தனை -- காலை 6:00 முதல் 6:00 மணி வரை. இடம்: 8வது குறுக்குத் தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
***
* வரசித்தி விநாயகர் கோவில்
சிறப்பு பூஜை, மகா அபிஷேகம், விஷு கனி தரிசனம் - காலை 7.00 முதல். சிறப்பு தரிசனம் -- மாலை 5:00 மணி முதல். இடம்: மின்வாரிய அலுவலகம் எதிரில், வேளச்சேரி.
