ADDED : ஏப் 18, 2026 05:08 PM
* கபாலீஸ்வரர் கோவில்
கிருத்திகையை முன்னிட்டு, சிங்காரவேலர் திருவீதி உலா - மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
* பார்த்தசாரதி பெருமாள் கோவில்
உடையவர் பல்லக்கு புறப்பாடு - காலை 7:00 மணி. திருமஞ்சனம் - மதியம் 2:30 மணி. புஷ்ப பல்லக்கு புறப்பாடு - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* நால்வர் இறைப்பணி மன்றம்
அகத்தியர் தேவாரத் திரட்டு முற்றோதல் - காலை 8:00 மணி. இடம்: பிரதான சாலை, அருள்முருகன் நகர், கீழ்க்கட்டளை.
* நாகாத்தம்மன் கோவில்
பாலமுருகனுக்கு அபிஷேக, அலங்காரம், சுவாமி உள்புறப்பாடு - மாலை 6:30 மணி முதல். இடம்: நாராயணபுரம், பள்ளிக்கரணை.
* காரணீஸ்வரர் கோவில்
நாகராஜன் தலைமையிலான கோவில் துாய்மை பணி - காலை 8:00 மணி முதல். இடம்: சைதாப்பேட்டை.
* ஓம் கந்தாஸ்ரமம்
சுவாமிநாத சுவாமிக்கு அபிஷேகம் - காலை 10:00 மணி முதல். இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
* வேதபுரீஸ்வரர் கோவில்
தேசிய ஹிந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன் சார்பில் உழவாரப்பணி - காலை 8:00 மணி முதல்.
* விட்டலன் சுவாமி கோவில்
நாம சங்கீர்த்தனம்: வித்யா கணேஷ் குழுவினர் - மாலை 4:00 மணி. இடம்: விட்டலாபுரம்.
* கூட்டு தியானம்
சாவித்திரி வாசிப்பு மற்றும் சிறப்பு கூட்டு தியானம் - காலை 10:00 மணி. இடம்: சென்னை அரவிந்தர் சொசைட்டி, முதல் அவென்யூ, நுாறடி சாலை, அசோக் நகர்.
பொது
* கொரிய உணவுத் திருவிழா
முக்பாங் எனும் பெயிரில், கொரியாவின் புகழ்பெற்ற தெரு உணவுகளை சுவைக்கலாம் - நண்பகல் 12:00, மாலை 6:30 மணி. இடம்: லிட்டில் சாய் உணவகம், 6வது அவென்யூ, பெசன்ட் நகர். 2வது அவென்யூ, அண்ணா நகர் கிழக்கு.
* வீடியோ கேம் கண்காட்சி
இண்டியா கேமிங் ஷோ எனும் பெயரில் வீடியோ கேம் மென்பொருள், கேமிங் சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்த கண்காட்சி - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
* பல் மருத்துவ கண்காட்சி
பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் செயல் முறை குறித்த கண்காட்சி - காலை 8:30 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
* நுால் வெளியீடு
டாக்டர் சிரிதர் எழுதிய 'காற்றுக்கென்ன வேலி' நுால் வெளியீடு. வெளியிடுபவர்: மதன். பங்கேற்பு: டாக்டர் பாஷி, திருப்பூர் கிருஷ்ணன், மரபின் மைந்தன் முத்தையா - மாலை 5:00 மணி. இடம்: பாரதிய வித்யா பவன், கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர்.
