sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தமிழுக்கு தொண்டாற்றுவதில் "தினமலர்' முதலிடம் : "ஸ்வயம்வராலய' ஜானகிராமன் புகழாரம்

/

தமிழுக்கு தொண்டாற்றுவதில் "தினமலர்' முதலிடம் : "ஸ்வயம்வராலய' ஜானகிராமன் புகழாரம்

தமிழுக்கு தொண்டாற்றுவதில் "தினமலர்' முதலிடம் : "ஸ்வயம்வராலய' ஜானகிராமன் புகழாரம்

தமிழுக்கு தொண்டாற்றுவதில் "தினமலர்' முதலிடம் : "ஸ்வயம்வராலய' ஜானகிராமன் புகழாரம்


ADDED : ஆக 23, 2011 02:02 AM

Google News

ADDED : ஆக 23, 2011 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ''தமிழுக்கு தொண்டாற்றுவதில் 'தினமலர்' நாளிதழ் முதலிடத்தை வகிக்கிறது,'' என, ஸ்வயம்வராயலா ஜானகிராமன் கூறினார்.உரத்த சிந்தனை அமைப்பின், 'இலக்கிய சங்கமம் தொடர் நிகழ்ச்சி-20' தேவநேயப் பாவாணர் சிற்றரங்கில் நேற்று நடந்தது. ஆகஸ்ட் மாதத்திற்கான பெருமைக்குரிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஜனக்ராஜ்க்கு விருது வழங்கி பேசியதாவது:நாளுக்கு நாள் நம்மிடையே, நம் பேச்சை நாமே மதிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. பலரும் ஊருக்கு தான் உபதேசம் என்கிற மனநிலையில் உள்ளனர். ஆனால், 'தினமலர்' இதழ், தமிழ் மொழி பற்றி சொல்வதோடு மட்டும் அல்லாமல் செயல்படுகிறது.சில மாதங்களுக்கு முன்னால், திருவல்லிக்கேணி பகுதியில், 'முடிவெட்டி தமிழ் வளர்க்கும் கலைஞன்' என்ற தலைப்பில் முடிவெட்டும் கடையில் தமிழ் வளர்க்கும், காவனூர் வேலன் என்பவரை பற்றி எழுதி இருந்தார்கள்.

இவ்வாறு எழுதுவதன் மூலமாக தமிழ் மேல் இளைய தலைமுறைக்கு ஆர்வம் வரும். தமிழ் வளர்க்கும் மனிதர்களை, 'தினமலர்' அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது. அதன் சேவை தொடர வேண்டும்.இவ்வாறு ஜானகிராமன் பேசினார்.பின்னர், 'வரலாற்று அறிவியல் பார்வையில் ரிக்வேதம்' என்ற நூலின் மதிப்புரை நடந்தது. பேராசிரியர் முகிலை ராசபாண்டியன் நூலை, மதிப்புரை செய்தார். சம்பத் தொகுப்புரை வழங்கினார். நன்றியுரை கூறிய உரத்த சிந்தனை அமைப்பின் செயலர் உதயம் ராம், 'காவனூர் வேலன் அடுத்த மாதம் சிறப்பிக்கப்படுவார்' என்றார்.






      Dinamalar
      Follow us