ADDED : செப் 07, 2011 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, அடுத்தடுத்து வந்த ரயில்களில் பயணம் செய்த இருவர், மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.கொளத்தூர் பெரியகுப்பத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 59; ரயில்வே கேட்டரிங் ஊழியர்.
இவர் நேற்று காலை, சென்னை சென்ட்ரல் வந்த மின்சார ரயிலில், இறந்து கிடந்தார். அதேபோல், லக்னோவிலிருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயில் இருக்கையில் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் சட்டை பாக்கெட்டில் இருந்த மருத்துவ அனுமதி சீட்டில் ரமேஷ், 40, என்ற பெயரும், நெல்லூரிலிருந்து ஏறியதற்கான பயண சீட்டும் கிடைத்துள்ளது.