sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை "ஜோர்'

/

நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை "ஜோர்'

நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை "ஜோர்'

நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை "ஜோர்'


ADDED : செப் 16, 2011 04:09 AM

Google News

ADDED : செப் 16, 2011 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நவராத்திரியை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு இடங்களில், கொலு விற்பனை சூடுபிடித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நிசும்பன், சும்பன், மகிசாசூரன், மதுகையப்பன், தும்புரலோச்சனன், ரக்தபீஜன் ஆகியோரை வதம் செய்ததை கொண்டாடும் வகையில், லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்கள் நவராத்திரியில் போற்றப்படுகிறது.நவராத்திரியையொட்டி பெரும்பாலான வீடுகளில், கொலு அடுக்கடுக்காக, வைப்பது வழக்கம். அவரவர் பொருளாதார வசதிக்கேற்ப, கொலு பொம்மைகளின் படிப்படியான அளவு அதிகரிக்கும். இதில் தற்போது உள்ள நவீன கொலு பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும், காட்சிக்கு வைக்கப்படும், கொலு பொம்மைகளில், ஒன்றிரண்டை மறுவீடு செல்லும் புதுப் பெண்ணிடம் கொடுத்து அனுப்புவதை, இன்னும் பலர் மரபாக வைத்துள்ளனர்.இதற்காக தமிழகம் மட்டும் இன்றி, பாண்டிச்சேரி, கேரளா, கோல்கட்டா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் கொலு பொம்மைகள் இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு அவதாரமும், தனி செட்டாக விற்கப்படுகிறது.

இவ்வகை கொலுபொம்மைகள், காகிதக்கூழ், பீங்கான், சுட்டமண், கல், மரம், பித்தளை போன்ற பலவகை கைவினை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. தனியாகவும், மொத்தமாகவும் பொம்மைகள் கிடைக்கின்றன. இதன் விலை ஐம்பது ரூபாயிலிருந்து ஒன்பதாயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது.தற்போது பாரதி, திருவள்ளுவர், காந்தி போன்ற தலைவர்களின் சிலையும் விற்பனையாகிறது. நவராத்திரிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில், விற்பனை சூடுபிடித்துள்ளது.






      Dinamalar
      Follow us