/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டாக்டர் வீட்டில் 15 சவரன் நகை, பணம் கொள்ளை
/
டாக்டர் வீட்டில் 15 சவரன் நகை, பணம் கொள்ளை
ADDED : செப் 19, 2011 01:42 AM
சென்னை : பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து, 15 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வெஸ்ட் என்ட் காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்,40. இவரின் மனைவி வனிதா,38. இருவரும், டாக்டராக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம், கணவன், மனைவி இருவரும், வீட்டைப் பூட்டிவிட்டு ஸ்ரீபெரும்புதூர் சென்றனர். இந்நிலையில், நேற்று காலை செல்வராஜ் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சபரிமலை கோவிலுக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து, வனிதா நேற்று மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, உள்ளே பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே, பீரோவில் இருந்த 15 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. கொரட்டூர் போலீசில் வனிதா புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.