sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுபாலத்தால் பயனில்லை; வெள்ளத்தில் மூழ்குது குரோம்பேட்டை

/

சிறுபாலத்தால் பயனில்லை; வெள்ளத்தில் மூழ்குது குரோம்பேட்டை

சிறுபாலத்தால் பயனில்லை; வெள்ளத்தில் மூழ்குது குரோம்பேட்டை

சிறுபாலத்தால் பயனில்லை; வெள்ளத்தில் மூழ்குது குரோம்பேட்டை


ADDED : செப் 21, 2011 01:30 AM

Google News

ADDED : செப் 21, 2011 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரோம்பேட்டையில் வெள்ள பாதிப்பை தவிர்க்கும் வகையில், நெடுஞ்சாலைத் துறை 42 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு சிறுபாலங்கள் அமைத்தும் எந்த பயனும் இல்லை.

லேசான மழைக்கே குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலை வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. குரோம்பேட்டை, பச்சைமலை, சானடோரியம், திருநீர்மலை, துர்கா நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதிகளில் இருந்து, மழைநீர் வெளியேற வழியில்லாததால், ஒவ்வொரு ஆண்டு மழைக்கும் குரோம்பேட்டை நியூ காலனி, ஜி.எஸ்.டி., சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வந்தன. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சானடோரியம், ராமாஞ்சநேயர் கோவிலுக்கு எதிரே ஒரு மீட்டர் அகலத்தில் ஜி.எஸ்.டி., சாலையில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு சிறுபாலமும், குரோம்பேட்டை வெற்றி திரையரங்கம் அருகே இரண்டு மீட்டர் அகலத்தில், 30 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சிறுபாலமும் அமைக்கப்பட்டது.



கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட, இந்த இரண்டு சிறுபாலங்களால் எந்த பயனும் இல்லாமல், தற்போதும் லேசான மழைக்கே, குரோம்பேட்டை பகுதி வெள்ளத்தில் மூழ்கி விடுகிறது. சானடோரியம், ராமாஞ்சநேயர் கோவில் எதிரே கட்டப்பட்டுள்ள சிறுபாலம் வழியாக செல்லும் மழைநீர், சிட்லபாக்கம் எல்லையிலுள்ள கால்வாய் வழியாக செல்வதில்லை. இந்த கால்வாயை தூர்வாரினால் மட்டுமே மழைநீர் செல்ல முடியும். இது குறித்து பல்லாவரம் நகராட்சிக்கு கடிதம் எழுதியும், கால்வாயை சிட்லபாக்கம் பேரூராட்சி தூர்வாரவில்லை. இதனால் பச்சைமலை, துர்கா நகர் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியேறும் மழைநீர், நியூ காலனி குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள்ளும் பாய்ந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதே போல குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் அருகே கட்டப்பட்டுள்ள சிறுபாலம் வழியாக செல்லும் மழைநீர், ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் சிறுபாலம் வழியாக செல்ல வேண்டும். அப்பகுதி கடைகள், ஓட்டல்களின் கழிவுகள் மூலம் அந்த கால்வாய் தூர்ந்து கிடப்பதால், மழைநீர் ஜி.எஸ்.டி., சாலையில் குளம் போல தேங்கிவிடுகிறது.



சமீபத்தில் பெய்த ஒரு மணி நேர மழைக்கு குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலையின் ஒரு பகுதியில், மூன்று அடி மழைநீர் தேங்கி, வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளித்ததால், நான்கு மணி நேர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குரோம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வெள்ளத்தில் மூழ்கியதால், மேஜை மீது வழக்கு ஆவணங்களை வைத்துவிட்டு போலீசார் தவித்தனர். பருவ மழை துவங்க உள்ள நிலையில், நெடுஞ்சாலைத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரி கள் ஒருங்கிணைந்து, முதல்வரின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் கால்வாய்களை தூர்வாரி, சீரமைக்க வேண்டும்; மழைநீர் எளிதில் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.








      Dinamalar
      Follow us