UPDATED : மே 02, 2026 04:10 PM
ADDED : மே 02, 2026 04:00 PM
(03/05/26)
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
சித்திரை மாத பிரம்மோற்சவத்தில் பார்த்தசாரதி பெருமாள் கருடசேவையில் புறப்பாடு, காலை 5:00 மணி, ஹம்ச வாக புறப்பாடு, இரவு 7:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
சிங்காரவேலர் வசந்த உத்சவம், இரண்டாம் நாள் சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில்
தெப்ப திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் எழுந்தருளும் காட்சி, மாலை 7:00 மணி. இடம்: பூங்கா நகர்.
அர்க்கீஸ்வரர் கோவில்
வேளச்சேரி திருக்கோவில் உழவாரப்பணி மன்றம் சார்பில், கோவில் சுத்தம் செய்யும் இறை பணி, காலை 8:00 மணி முதல். இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.
பொன்னியம்மன் கோவில்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு அலங்கார ஆராதனை, காலை 9:00 மணி, தீ மிதித்தல், மாலை 6:30 மணி. இடம்: விவேகானந்தர் தெரு, பள்ளிக்கரணை.
செல்லியம்மன் கோவில்
மண்டல பூஜை, மாலை 6:30 மணி. இடம்: வேளச்சேரி.
வினை தீர்த்த விநாயகர் கோவில்
மண்டல பூஜை, மாலை 6:00 மணி. இடம்: பிரதான சாலை, பள்ளிக்கரணை.
பொது
பர்னிச்சர் கண்காட்சி
அனைத்து வித வீட்டு உபயோக பர்னிச்சர் கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
கைவினை, ஆடைகள் கண்காட்சி
'கலா உத்சவம்' எனும் பெயரில் கைவினை, ஆடைகள், நகை, உணவு வகைகள் கண்காட்சி, காலை 11:00 மணி. இடம்: அருள்முருகன் டவர்ஸ், 200 அடி சாலை, பழைய பல்லாவரம்.
வார விடுமுறை ஜாலி ஓட்டம்
தடகள, உடற்பயிற்சி குழுவான, 'வாமோஸ்' சார்பில் நடத்தும் வார விடுமுறை நாள் ஜாலி ஓட்டம், காலை 6:00 மணி. இடம்: பிள்ளையார் கோவில் தெரு, போரூர்.
கோடை கால பயிற்சி முகாம்
பல்கலைகளுக்கான கோடை கால பயிற்சி முகாம், மாலை 4:00 மணி. இடம்: 11வது தளம், எல்.பி.ஆர்., டவர், தேனாம்பேட்டை.
நாரத கான சபா
'தனிமை' நாடகம், இரவு 7:00 மணி. இடம்: டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.
வாய்ப்பாட்டு
ஸ்ரீ அன்னமாச்சார்யா கீர்த்தனைகள் - வாய்ப்பாட்டு, கற்பகம் சங்கீத வித்யாலயம் குழுவினர், பவதாரிணி அனந்தரமான், வயலின் மங்களம், மிருதங்கம் ஆதித்யன், மாலை 6:30 மணி முதல். இடம்: பாலசுப்ரமண்ய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
