/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சென்னை ஒன்' டிக்கெட் 3 மணி நேரம் தான் செல்லும்
/
'சென்னை ஒன்' டிக்கெட் 3 மணி நேரம் தான் செல்லும்
ADDED : செப் 25, 2025 02:54 AM
சென்னை :'சென்னை ஒன் செயலி வாயிலாக எடுக்கும் மின்சார ரயில் டிக்கெட்டுகளை, மூன்று மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை புறநகரில், மின்சார ரயில், மெட்ரோ, மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்சிகளில் பயணிக்க வசதியாக, 'சென்னை ஒன்' செயலியை, கடந்த 22ம் தேதி தமிழக அரசு துவக்கி வைத்தது.
இந்த செயலியில், புறநகர் மின்சார ரயிலின் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம். ஏற்கனவே உள்ள யூ.டி.எஸ்., செயலி இருப்பது போல், இந்த செயலியையும் பயணியர் பயன்படுத்தலாம்.
புறநகர் ரயில் கட்டணத்தில் மாற்றம் இல்லை. 'ஏசி' மின்சார ரயில் டிக்கெட் எடுக்க முடியாது.
டிக்கெட் பரிசோதனையின்போது, பயணியர் 'அசல் ரயில் டிக்கெட்டைக் காட்டு' பக்கத்தின் வாயிலாக, டிக்கெட்டுகளைக் காண்பிக்க வேண்டும். டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாது.
இந்த டிக்கெட்டுகள் எடுத்த, அடுத்த மூன்று மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.