/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.எம்., நார்ம் செஸ் போட்டி சென்னை வீரர் முன்னிலை
/
ஐ.எம்., நார்ம் செஸ் போட்டி சென்னை வீரர் முன்னிலை
ADDED : நவ 02, 2025 12:41 AM

சென்னை: ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் போட்டியில், சென்னை வீரர் பிரணவ் முன்னிலையில் உள்ளார்.
சக்தி குழுமம் சார்பில், 34வது ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் போட்டி போரூரில் நடக்கிறது. இதில், இந்திய வீரர்கள் ஐவர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஐவர் மாறி மாறி மோதுகின்றனர்.
நேற்றைய ஐந்தாவது சுற்றில், முன்னிலை வகித்த தமிழக வீரர் தினேஷ், கியூபா வின் ஒட்டேரோ அகஸ்டாவிடம் கடுமையாக போராடி தோல்வியடைந்தார்.
கர்நாடக வீராங்கனை அபூர்வா காம்பிளே - சென்னை வீரர் ராகவ் மோதிய ஆட்டம், ஆரம்பத்தில் சம நிலையில் சென்றது. ஆனால், ராகவின் தவறான நகர்வு காரணமாக, அபூர்வா வெற்றி பெற்று, 3.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார்.
அதேபோல், கியூபாவின் ஜார்ஜ் மார்க்கோஸை, சென்னை வீரர் பிரணவ் வீழ்த்தி, 3.5 புள்ளிகள் பெற்று முன்னிலை பெற்றார். போட்டிகள், தொடர்ந்து நடக்கின்றன.

