/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் சென்னை வீரர் பிரணவ் முதலிடம்
/
ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் சென்னை வீரர் பிரணவ் முதலிடம்
ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் சென்னை வீரர் பிரணவ் முதலிடம்
ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் சென்னை வீரர் பிரணவ் முதலிடம்
ADDED : நவ 05, 2025 01:22 AM

சென்னை: ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் போட்டியில், சென்னை வீரர் பிரணவ், அபூர்வுடன் சமபுள்ளி பெற்றதால், 'டை- பிரேக்' மதிப்பெண் அடிப்படையில், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில், 34வது ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் போட்டி, போரூரில் நேற்று மாலை நிறைவடைந்தது. இதில், ஐந்து இந்திய வீரர்கள், ஐந்து வெளிநாட்டு வீரர்களுடன் மோதினர்.
எட்டாவது சுற்று முடிவில், கர்நாடகாவின் அபூர்வ் காம்பிளே முன்னிலையில் இருந்தார். ஒன்பதாவது சுற்றான இறுதி சுற்றில் அவர், கியூபாவின் டாயாஸ்மி ஓஸ்டலாராவுடன் கடுமையாக போராடி, ஆட்டத்தை 'டிரா' செய்தார்.
இதனால், அபூர்வ் 6.5 புள்ளிகளைப் பெற்று, இரண்டாவது இடம் பெற்றார்.
அதேபோல், சென்னை வீரர் பிரணவும் 6.5 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தார். எனினும், டை-பிரேக் மதிப்பெண் பிரணவுக்கு சாதகமாக இருந்ததால், அவர் சாம்பியன் கோப்பையையும் கைப்பற்றினார்.
கியூபாவின் டாயாஸ்மி ஓஸ்டலாரா மூன்றாம் இடம் பிடித்தார். தமிழக வீரர் தினேஷ் ராஜன், 5 புள்ளிகளுடன் நான்காவது இடமும், கியூபாவின் ஜார்ஜ் மார்கோஸ் ஐந்தாவது இடமும் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜி.ஷ்யாம் சுந்தர், இந்திய சதுரங்க சங்க முன்னாள் துணைத் தலைவர் சுந்தர் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.

