/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஆன்லைன்' முதலீட்டில் கவனம் சென்னை போலீஸ் எச்சரிக்கை
/
'ஆன்லைன்' முதலீட்டில் கவனம் சென்னை போலீஸ் எச்சரிக்கை
'ஆன்லைன்' முதலீட்டில் கவனம் சென்னை போலீஸ் எச்சரிக்கை
'ஆன்லைன்' முதலீட்டில் கவனம் சென்னை போலீஸ் எச்சரிக்கை
ADDED : ஆக 31, 2025 03:14 AM
சென்னை:'ஆன்லைன்' முதலீடு தொடர்பாக வரும் போலியான விளம்பரங்களில் இருந்து, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, சென்னை காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, காவல் துறையின் செய்திக்குறிப்பு:
பிரபலமான நிதி நிறுவனங்களின் பெயரை போலியாக பயன்படுத்தி, சென்னையில், 'ஆன்லைன்' முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, 'ஐ.ஐ.எப்.எல்., கேப்பிடல்' என்ற முதலீட்டு நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் என விளம்பரம் செய்து, 'வாட்ஸாப்' குழுவில் அப்பாவிகளை சேர்த்து, அங்கீகரிக்கப்படாத செயலிகளை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யவைத்து, சைபர் குற்றவாளிகள் பணத்தை அபகரிக்கின்றனர்.
ஆரம்பத்தில் குறைந்த தொகை கட்டும்போது முறையாக பணத்தை திருப்பி வழங்கி, பின் அதிக பணம் செலுத்தினால் மட்டுமே, அனைத்து முதலீட்டு பணத்தையும் எடுக்க முடியும் என, அதிகளவில் பணம் செலுத்த வற்புறுத்தப்படுகின்றனர். ஆன்லைனில் செலுத்தப்படும் பணத்திற்கு ரசீதோ, ஆவணமோ, ஒப்பந்தமோ தரப்படுவதில்லை.
எனவே அதிக லாபம் கொடுப்பதாக கூறும் ஆன்லைன் முதலீட்டு விளம்பரங்கள், போலியான முதலீட்டு செயலிகளை நம்பி, அடையாளம் தெரியாத நபர்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி, மக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.