/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை துறைமுக மேம்பாடு ஜெர்மனி குழு ஆலோசனை
/
சென்னை துறைமுக மேம்பாடு ஜெர்மனி குழு ஆலோசனை
ADDED : பிப் 21, 2026 05:52 AM
சென்னை: சென்னைத் துறைமுகத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது குறித்து, ஜெர்மனி நாட்டின் ஹாம்பர்க் துறைமுக குழுவினருடன், சென்னை துறைமுக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
ஜெர்மனி நாட்டின், ஹாம்பர்க் துறைமுக தலைமை செயல் அதிகாரி ஜென்ஸ் மீயர் தலைமையில், 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுவினர், நேற்று முன்தினம் சென்னை துறைமுகம் வந்தனர்.
அவர்களை, சென்னை துறைமுக தலைவர் விஸ்வநாதன் வரவேற்றார். சென்னை துறைமுக கட்டமைப்பு, கப்பல் தளங்கள், சரக்குப் பெட்டக வசதிகளை, ஜெர்மன் குழுவினர் பார்வையிட்டனர்.
பின், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக, இரு துறைமுகங்களின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
சென்னை துறைமுகத்தில் தற்போதுள்ள வசதிகள், நடந்து வரும் வளர்ச்சித் திட்டங்கள், பசுமைத் திட்டங்கள், இணைப்புச் சாலைகள், சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டடுக்கு மேம்பால சாலை திட்டம் குறித்து விரிவாக பேசினர்.

