/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை பள்ளி மாணவர்கள் தேசிய செஸ் போட்டிக்கு தகுதி
/
சென்னை பள்ளி மாணவர்கள் தேசிய செஸ் போட்டிக்கு தகுதி
சென்னை பள்ளி மாணவர்கள் தேசிய செஸ் போட்டிக்கு தகுதி
சென்னை பள்ளி மாணவர்கள் தேசிய செஸ் போட்டிக்கு தகுதி
ADDED : நவ 02, 2024 12:17 AM
சென்னை, பள்ளிக்கல்வித்துறையின் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், பல்வேறு மாவட்டங்களில் நடக்கிறது. இதில், செஸ் போட்டி திருப்பத்துார் மாவட்டத்தில் நடத்தப்பட்டது. போட்டியில், 11, 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட, நான்கு பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில், 19 வயது பிரிவில், முகப்பேர் வேலம்மாள் மாணவி கீர்த்தி முதலிடத்தையும், 17 வயது பிரிவில் பெரம்பூர், புனித ஜோசப் பள்ளியின் நட்சத்திரா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
அதேபோல், 14 வயது பிரிவில், முப்பேர் வேலம்மாள் மாணவி பவித்ரா மூன்றாம் இடத்தையும், ஜார்ஜ்டவுன் புனித கொலபியன்ஸ் பள்ளி மாணவி ஆர்ஷியா மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து, 14 வயது பிரிவில், திருவொற்றியூர், இந்துஜா மெட்ரிக் பள்ளியின் மாணவன் ஜாக்சன், 11 வயது பிரிவில், முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் க்ரிசங் நிகேஷ் ஆகியோர் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
போட்டியில் வென்ற சென்னை மாணவ - மாணவியர், இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய போட்டியில், தமிழக அணியின் சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.