/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில டேபிள் டென்னிஸ் சென்னை வீரர்கள் அசத்தல்
/
மாநில டேபிள் டென்னிஸ் சென்னை வீரர்கள் அசத்தல்
ADDED : நவ 11, 2024 01:35 AM
சென்னை:சிறுவர், சிறுமியருக்கான மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், 15 வயது பிரிவில், சென்னையின் அனன்யா மற்றும் அக் ஷய் ஆகியோர், அரையிறுதிக்கு முன்னேறினர்.
தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் ஆதரவுடன், தஞ்சாவூர் மாவட்ட டேபிள் டென்னிஸ் கழகம் சார்பில், ஏழாவது மாநில டேபிள் டென்னிஸ் 'ரேங்கிங்' விளையாட்டுப் போட்டிகள், கடந்த வெள்ளிக்கிழமை தஞ்சை, அனிதா பார்த்திபன் உள்விளையாட்டு அரங்கில் தொடங்கின.
'நாக் - -அவுட்' முறையில் நடக்கும் இப்போட்டிகள், 11, 13, 15, 17, 19 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் என, 6 பிரிவுகளில், இரு பாலருக்கும் தனித்தனியாக நடக்கின்றன.
இதில் சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர் என, மாநிலம் முழுதும் இருந்து, 1,300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், 15 வயதிற்கு உட்பட்டோர் பெண்கள் பிரிவில், சென்னை வீராங்கனை அனன்யா, மற்றொரு சென்னை வீராங்கனை சாத்விகாவை 11 - -2, 11 - -7, 11 - -5 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதே வயது பிரிவில், ஆண்களுக்கான போட்டியில், சென்னை வீரர் அக் ஷய் பூஷண் சக வீரர் தருணை 11- - 7, 11 - -8, 8 - -11, 15 - -13 என போராடி வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
இப்போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்கள், 'ரேங்கிங்' அடிப்படையில் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.