/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில கிரிக்கெட் தொடரில் சென்னை அணி சாம்பியன்
/
மாநில கிரிக்கெட் தொடரில் சென்னை அணி சாம்பியன்
ADDED : அக் 09, 2025 02:45 AM

சென்னை, சென்னையில் ந டந்த மாநில ஆண்கள் கிரிக்கெட் போட்டியில், சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
முதல்வர் கோப்பை போட்டிகள், 'நாக் அவுட் கம் லீக்' முறையில் சென்னையில் பல்வேறு மைதானங்களில் நடந்தன. நாக் அவுட் முடிவில் சென்னை, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு உட்பட எட்டு அணிகள் லீக் போட்டிக்கு தகுதி பெற்றன. இதன் இறுதி லீக் போட்டிகள் நேற்று நடந்தன.
முதல் போட்டியில் சென்னை அணி, 10 ஓவரில் நான்கு விக்கெட் இழந்து 87 ரன்களை அடித்தது. பரத் 21, தேவ் அர்ஜூன் 35 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து இறங்கிய ஈரோடு அணி 10 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 45 ரன் அடித்தது. 42 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது. போட்டியில் அதிக புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றது.
இரண்டாவது இடத்தை பிடித்த ஈரோடு அணி வெள்ளியும், மூன்றாவது இடத்தை பிடித்த கிருஷ்ணகிரி அணி வெண்கல பதக்கத்தையும் வென்றன.