/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை டென்னிஸ் தொடர் செங்கை வீராங்கனையர் அசத்தல்
/
சென்னை டென்னிஸ் தொடர் செங்கை வீராங்கனையர் அசத்தல்
ADDED : அக் 05, 2025 01:57 AM
சென்னை, சென்னையில் நடந்து வரும் கல்லுாரி மாணவியருக்கான மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில், செங்கல்பட்டு மாவட்டத்தின் மிருதுளா பழனிவேல், பிரியதர்ஷினி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவிலான கல்லுாரி மாணவியருக்கு இடையே முதல்வர் கோப்பை டென்னிஸ் தொடர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில் நடக்கிறது.
நேற்று முன்தினம் நடந்த மாணவியர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று போட்டியில், செங்கல்பட்டு மாவட்டத்தின் மிருதுளா பழனிவேல், திருச்சி மாவட்டத்தின் சஞ்சனாவை எதிர்த்து மோதினார்.
இதில் அசத்திய மிருதுளா, 8 - 0 என்ற செட் கணக்கில், சஞ்சனாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அடுத்த போட்டியில், செங்கல்பட்டு மாவட்டத்தின் பிரியதர்ஷினி, திருச்சி மாவட்டத்தின் புவனேஷ்வரியை 8 - 1 என்ற செட் கணக்கிலும், திருச்சியின் கிரிஜா, நெல்லையின் கார்த்திகா லட்சுமியை 8 - 1 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தி வெற்றி பெற்றனர்.