/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய பல்கலை செஸ் போட்டி சென்னை பல்கலை முதலிடம்
/
தேசிய பல்கலை செஸ் போட்டி சென்னை பல்கலை முதலிடம்
ADDED : மார் 30, 2025 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மார்ச் 30--
டில்லி பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான செஸ் போட்டி, டில்லியில் சமீபத்தில் நடந்தது.
போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை, மும்பை பல்கலை, டில்லி பல்கலை, அண்ணா பல்கலை, பாரதியார் பல்கலை உள்ளிட்ட அணிகள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தின.
போட்டியில், சென்னை பல்கலை அணி, ஒரு சுற்றில் கூட தோல்வியடையாமல், 10க்கு 9 புள்ளிகள் பெற்று, முதலிடத்தை பிடித்து அசத்தியது.
சென்னை பல்கலை அணியில், எம்.ஓ.பி., வைஷ்ணவாவின் ஐந்து வீராங்கனையர், ஸ்ரீசங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் கல்லுாரியின் ஒரு வீராங்கனையும் இடம்பெற்றிருந்தனர்.