/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை வீல் சேர் டென்னிஸ் தமிழக ஆடவர் அணி சாம்பியன்
/
சென்னை வீல் சேர் டென்னிஸ் தமிழக ஆடவர் அணி சாம்பியன்
சென்னை வீல் சேர் டென்னிஸ் தமிழக ஆடவர் அணி சாம்பியன்
சென்னை வீல் சேர் டென்னிஸ் தமிழக ஆடவர் அணி சாம்பியன்
ADDED : ஜூலை 27, 2025 12:18 AM

சென்னை. சென்னையில் நடந்த தேசிய வீல் சேர் டென்னிஸ் தொடரின் இரட்டையர் சுற்றில், தமிழகத்தின் பாலசந்தர் மற்றும் சேகர் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் மற்றும் இந்தியம் நிறுவனம் இணைந்து, தேசிய அளவில், 4வது இந்தியம் ஏ.ஐ.டி.ஏ., டென்னிஸ் தொடரை, நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில் நடத்துகின்றன.
இதில், இரட்டையருக்கான ஆடவருக்கான இறுதி போட்டியில், தமிழகத்தின் பாலசந்தர் - சேகர் ஜோடி, கர்நாடகாவின் பசவராஜ் எம் குண்டராகி - அணில் டி அல்மைதா ஜோடியை எதிர்த்து மோதியது.
இதில், சிறப்பாக விளையாடிய தமிழக ஜோடி, 6 - 1, 6 - 4 என்ற செட் கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மகளிர் பிரிவு , கர்நாடகாவின் கெ.பி.சில்பா - கே.சில்பா ஜோடி, மற்றொரு கர்நாடகாவின் பிரதிமா என் ராவ் - எம்.கே.முபீனா ஜோடி மோதியது.
இதில், கெ.பி.சில்பா - கே.சில்பா ஜோடி 6 - 3, 6 - 3 என்ற செட் கணக்கில் வென்று, மகளிர் இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.