ADDED : மார் 28, 2026 04:48 PM
ஆன்மிகம்
* கபாலீஸ்வரர் கோவில்
பங்குனி பெருவிழாவில் இறைவன் தேரில் எழுந்தருளல் - காலை 6:10 மணி. தேர் வடம்பிடித்தல் - காலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
* மருந்தீஸ்வரர் கோவில்
பங்குனி பெருவிழாவில், சந்திரசேகரர் திருத்தேரில் பிரம்மனுக்கு காட்சியருளல் - காலை 7:10 மணி. புஷ்ப விமான புறப்பாடு - இரவு 9:00 மணி. இடம்: திருவான்மியூர்.
* பார்த்தசாரதி பெருமாள் கோவில்
மணிபுராணம் - மதியம் 3:00 மணி. ரங்கநாதர் பெரியவீதி புறப்பாடு - மாலை 5:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* ஆஞ்சநேயர் கோவில்
ராமநவமியை முன்னிட்டு லட்சார்ச்சனை பூர்த்தி - காலை 11:00 மணி. சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு - இரவு 7:00 மணி. இடம்: நங்கநல்லுார்.
* மல்லிகேஸ்வரர் கோவில்
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகள் திருத்தேர் உலா - காலை 7:00 மணி. இடம்: மண்ணடி.
* காரணீஸ்வரர் கோவில்
நாகராஜன் தலைமையிலான கோவில் துாய்மை பணி - காலை 8:00 மணி முதல். இடம்: சைதாப்பேட்டை.
* சக்தி லிங்கேஸ்வரர் கோவில்
விஜயா சுவாமிநாதன் தலைமையிலான சிவலோக நாயகன் உழவாரப்பணி மன்றத்தின் இறைப்பணி - காலை 8:00 மணி முதல். இடம்: மாகாளி தேவி மாங்காளி அம்மன் கோவில் வளாகம், தர்கா சாலை, பல்லாவரம்.
* ராம நவமி விழா
சிறப்பு கனி அலங்கார தரிசனம் - காலை 7:00 மணி. கூடி உணவு அருந்துதல் - பகல் 12:00 மணி. இடம்: 53வது தெரு, அசோக் நகர்.
பொது
* சொற்பொழிவு
திருவொற்றியூர் பாரதி பாசறையின் திருவாசகம் மூன்றாம் மாத தொடர் சொற்பொழிவு. 'சிவபுராணம்' என்ற தலைப்பில், முனைவர் மா.கிரமணன் சிறப்புரை - காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீபாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜன சபை, கிராமத்தெரு, திருவொற்றியூர்.
* கவியரங்கம்
தமிழ்க்கூடலின் 'கரு சுமந்த காவியம்' கவியரங்கம். தலைமை: வடிவேலழகன் ஆதி, நடுவர்: மணிகண்ட ராசு - மாலை 5:30 மணி. இடம்: சுவாமி விவேகானந்தர் பயிலகம், சூரியா நகர், மேடவாக்கம்.
* நாடகம்
பாரதி - யார்? வரலாற்று நாடகம் - மாலை 6:00 மணி. இடம்: ஸனந்தா திருமண மண்டபம், மாடம்பாக்கம் பிரதான சாலை, ராஜகீழ்ப்பாக்கம்.
* நுால் வெளியீடு
தங்கம் காந்திராஜன் எழுதிய, 'அய்யனார் - தமிழ்க்குடிகளின் தொல் தெய்வம்' நுால் வெளியீடு பங்கேற்பு: தொல்லியலாளர் வி.செல்வக்குமார், ஷர்மிளா தேவதாஸ், ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்., சித்ரா கோபிநாத், வெண்ணிலா - மாலை 5:00 மணி. இடம்: எல்.பி.ஆர்., டவர்ஸ், 11வது மாடி, அண்ணா சாலை, தேனாம்பேட்டை.
* சுற்றுலா தொழில் பொருட்காட்சி
இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி - காலை 11:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.
* வீட்டு உபயோக பொருள் கண்காட்சி
வசந்த் அண்டு கோ சார்பில், வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
