/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மக்கள் தேவையை நிறைவேற்றும் அதிகாரம் முதல்வருக்கு தான்: சி.பி.ராதாகிருஷ்ணன்
/
மக்கள் தேவையை நிறைவேற்றும் அதிகாரம் முதல்வருக்கு தான்: சி.பி.ராதாகிருஷ்ணன்
மக்கள் தேவையை நிறைவேற்றும் அதிகாரம் முதல்வருக்கு தான்: சி.பி.ராதாகிருஷ்ணன்
மக்கள் தேவையை நிறைவேற்றும் அதிகாரம் முதல்வருக்கு தான்: சி.பி.ராதாகிருஷ்ணன்
ADDED : ஜன 09, 2024 12:36 AM

சென்னை, பெரம்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் விவேகானந்தர் ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் மற்றும் பொங்கல் விழா, முப்பெரும் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
இதில், சிறப்பு விருந்தினராக ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
பின் அவர் பேசியதாவது:
பொது வாழ்க்கை என வரும்போது, நாம் பிறருக்காக வாழ கற்க வேண்டும். தமக்காக வாழ்பவர்கள் தலைவர் அல்ல. காமராஜர், கக்கன் போன்றோர் பிறருக்காக வாழ்ந்ததால் தான், மக்கள் இன்றும் அவர்களை நினைவு கூருகின்றனர்.
கவர்னர் பதவி என்பது முழுமையான அதிகாரம் பெற்ற பதவி அல்ல. அரசியல் சாசனத்தை கட்டி காக்க இருக்கிற ஒரு பதவி.
ஒரு முதல்வருக்கு தான், மக்களின் தேவையை உணர்ந்து அதை நிறைவேற்றும் அதிகாரம் உண்டு. அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி வரும்போது தான், கவர்னருக்கு அதிகாரம் வரும்.
உங்கள் கடமை எது; அதிகாரம் எது என்பதை உணர்ந்து நிற்க வேண்டும். அதேபோல பிறரின் அதிகாரம் எது என்பதையும் உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்தால், தேவையற்ற முரண்பாடு வராது.
இவ்வாறு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் மயிலை ராமகிருஷ்ணா மடத்தின் சுவாமி அபவர்கானந்தாஜி, விவேகானந்த வித்யாலயா பள்ளி தாளாளர் சீனிவாசன், முதல்வர் சுபஸ்ரீ ஆகியோர் பங்கேற்றனர்.