/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொருக்குப்பேட்டை மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர்
/
கொருக்குப்பேட்டை மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர்
கொருக்குப்பேட்டை மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர்
கொருக்குப்பேட்டை மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர்
ADDED : பிப் 13, 2026 06:05 AM

ஆர்.கே.நகர்: கொருக்குப்பேட்டையில், 96.04 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும், 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புது மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை மாநகராட்சி மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து, கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தையும், அருகில் உள்ள பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில், 96.04 கோடி ரூபாய் செலவில் கொருக்குப்பேட்டை '2பி' ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை - மணலி சாலையில், 840 மீ., நீளம்; 8.4 மீட்டர் அகலம், 5 மீட்டர் சேவை சாலைகள் வசதியுடன் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தை நேற்று திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், கட்டுமான பணியில் ஈடுபட்ட பொறியாளர்களை பாராட்டினார்.
இந்த மேம்பாலத்தால், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, கண்ணதாசன் நகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல், கொருக்குப்பேட்டை - எண்ணுார் நெடுஞ்சாலையில், '2ஏ' ரயில்வே மேம்பாலம் கட்டப்பட உள்ளது. 448 மீட்டர் நீளம், 16 மீட்டர் அகலம், 5 மீட்டர் சேவை சாலை உள்ளிட்ட வசதியுடன், 75 கோடி ரூபாய் செலவில், மேம்பாலம் கட்டும் பணி மற்றும் பூங்கா கட்டும் பணிக்கும், நேற்று முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, கமிஷனர் குமரகுருபரன், வடசென்னை தி.மு.க., - எம்.பி., கலாநிதி, ஆர்.கே.நகர் தி.மு.க., - எம்.எல்.ஏ., எபினேசர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

