/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறனாளிகளுக்கான 'விழுதுகள்' சேவை மையத்தை துவக்கினார் முதல்வர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான 'விழுதுகள்' சேவை மையத்தை துவக்கினார் முதல்வர்
மாற்றுத்திறனாளிகளுக்கான 'விழுதுகள்' சேவை மையத்தை துவக்கினார் முதல்வர்
மாற்றுத்திறனாளிகளுக்கான 'விழுதுகள்' சேவை மையத்தை துவக்கினார் முதல்வர்
ADDED : நவ 26, 2024 01:02 AM

சென்னை, சென்னை, கண்ணகிநகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'விழுதுகள்' என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் கீழ், விழுதுகள் என்ற ஒருங்கிணைந்த சேவை மையம், தமிழகத்தில், 273 இடங்களில் அமைக்கப்பட உள்ளது. முதல் மையம், சென்னை மாநகராட்சி, 196வது வார்டு, கண்ணகிநகரில், 3.08 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கல்வி, கண் பார்வை அளவியல், கேட்டல், பேச்சு பயிற்சி, பிசியோதெரபி, செயல்முறை, உளவியல் ஆகிய ஆறு மறுவாழ்வு சேவைகள், ஒரே இடத்தில் வழங்கப்படும். இதற்காக வல்லுனர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த மையம், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 - -24ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணையின்படி, இம்மையத்தில் சேவைகள் வழங்கப்படும்.
கண்காணிப்பு கேமரா, நவீன கழிப்பறை உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், 3.08 கோடி ரூபாய் செலவில் இம்மையம் சீரமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளியால் நடத்தப்படும் ஆவின் பாலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அங்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் உரையாடினார். சோழிங்கநல்லுாரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில், 69 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட, மழலையர் பிரிவு கட்டடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
முன்னதாக, அரை கி.மீ., நடந்து சென்று, வரவேற்பு அளிக்க நின்ற பொதுமக்களிடம் நலம் விசாரித்தார். குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். சிலருடன், 'செல்பி' எடுத்துக் கொண்டார். விழுதுகள் மையத்தை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சோழிங்கநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், சென்னை மேயர் பிரியா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் சிஜி தாமஸ் வைத்யன், முன்னாள் நீதிபதி சந்துரு, மண்டலக்குழு தலைவர்கள் ரவிச்சந்திரன், மதியழகன், 195வது வார்டு கவுன்சிலர் ஏகாம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.