/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை சங்கமம் நிறைவு கலைஞர்களுக்கு முதல்வர் பாராட்டு
/
சென்னை சங்கமம் நிறைவு கலைஞர்களுக்கு முதல்வர் பாராட்டு
சென்னை சங்கமம் நிறைவு கலைஞர்களுக்கு முதல்வர் பாராட்டு
சென்னை சங்கமம் நிறைவு கலைஞர்களுக்கு முதல்வர் பாராட்டு
ADDED : ஜன 18, 2025 12:35 AM

அண்ணா நகர்,
கலை பண்பாட்டுத்துறை சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழா' சென்னையில், இம்மாதம், 13ம் தேதி, கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் கோவிலில் நேற்று துவங்கியது. முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
சென்னையின், 18 இடங்களில் ஐந்து நாட்களாக, பாரம்பரிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த திருவிழா நேற்று நிறைவடைந்தது. அண்ணா நகர் டவர் பூங்காவில், நேற்று மாலை நடந்த இறுதி நாள் நிகழ்ச்சியை, முதல்வர் ஸ்டாலின் கண்டுக்களித்தார். பல்வேறு கலைஞர்கள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
சர்ச்சை
இதை பார்த்து அசந்த முதல்வர் ஸ்டாலின், மேடையில் ஏறி, மல்லர்கம்பம் ஏறி நிகழ்ச்சி நடத்திய, மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு சால்வை அணிவித்து, தட்டிக் கொடுத்து பாராட்டினார்.
திருப்பத்துாரான் கலைக்குழு நடத்திய நிகழ்ச்சியில் பாடிய நபர், 'சும்மா கிடந்தாலும் கிடக்கும்; நாகரிகம் ஓடி வந்து கெடுக்கும்' என்ற பாடலில் பெண்களுக்கு எதிராக சில வரிகள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.
மாற்றம் வரும்
நிகழ்ச்சி முடிவில், கனிமொழி எம்.பி., அளித்த பேட்டி:
ஆண்டுதோறும் கலை விழாவிற்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. மேடையில் பாடிய பாடல், பெண்கள் வளர்ச்சிக்கு எதிரானதல்ல; புதிய விஷயங்களை எப்படி வாழ்க்கை முறை மாற்றுகிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின்மீது நம்பிக்கை உள்ளது. ஒரு கலை வடிவத்தின்மீது, நம் நம்பிக்கையை திணிக்க முடியாது. அவர்களுக்கு புரிதல் ஏற்பட்டு, நிச்சயம் மாறுதல் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.