/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சென்னை ஒன்' போக்குவரத்து செயலி வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
/
'சென்னை ஒன்' போக்குவரத்து செயலி வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
'சென்னை ஒன்' போக்குவரத்து செயலி வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
'சென்னை ஒன்' போக்குவரத்து செயலி வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : செப் 22, 2025 10:47 PM
சென்னை:'சென்னை ஒன்' என்ற ஒருங்கிணைந்த பொது போக்குவரத்துக்கான செயலியை நேற்று, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், வாடகை கார், ஆட்டோ போன்ற பொது போக்குவரத்துக்களை இணைக்கும் வகையில், 'சென்னை ஒன்' என்ற பெயரில், மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.
'கும்டா' எனப்படும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு வாயிலாக, இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி, ஒரே க்யூ.ஆர்., குறியீடு பயணச்சீட்டு வாயிலாக, ஐ.ஓ.எஸ்., மற்றும் ஆன்ட்ராய்டு மொபைல் போன்களில் பயன்படுத்தலாம். தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கும்டா ஆணையத்தின் இரண்டாவது கூட்டம் நேற்று நடந்தது. இதில், சென்னை ஒன் செயலியை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் முத்துசாமி, சேகர்பாபு, சிவசங்கர், ரகுபதி, தலைமை செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.