/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் விருது: ஆக., 1க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
முதல்வர் விருது: ஆக., 1க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
முதல்வர் விருது: ஆக., 1க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
முதல்வர் விருது: ஆக., 1க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூலை 18, 2025 11:57 PM
சென்னை, முதல்வர் மாநில விளையாட்டு விருதுகள் பெற, தகுதியுள்ள நபர்கள் ஆக., 1க்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆண்டுதோறும் சர்வதேச, தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனையர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியருக்கு, முதல்வர் மாநில விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன.
போட்டிகளை நடத்துபவர், நிர்வாகி, ஆதரவு நிறுவனம், நன்கொடையாளர், நடுவர், நீதிபதி உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது.
அதன்படி, 2024 - 25, 2025 - 26 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான விருதுகளுக்கு, தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவம், விரிவான விதிமுறைகள் குறித்து, http://www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும், மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தில், 'முதல்வர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்' என்று எழுதி, போலீசில் தடையில்லா சான்றிதழ் பெற்று இணைத்து, நேரு பூங்காவில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில், வரும் ஆக., 1 மாலைக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, 74017 03480 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

