ADDED : மார் 05, 2026 05:17 AM

அ நிறம் | அளவு
ஆவடி: திருமுல்லைவாயிலில், 'ஏசி' வசதியுடன் கூடிய முதல்வர் படைப்பகத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
திருமுல்லைவாயில், சோழம்பேடு சாலையில், 6வது மாநில நிதிக்குழு மானியம் மற்றும் கல்வி நிதியில் இருந்து, 3.69 கோடி ரூபாய் செலவில் முதல்வர் படைப்பகம் கட்டப்பட்டது .
தரைத்தளம், முதல் மற்றும் இரண்டு தளங்கள் உடைய இந்த கட்டடத்தை, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும் சிறப்பாக, போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இணைய சேவை, குடிநீர், கழிப்பறை, 'சிசிடிவி' உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர், மாநகராட்சி மேயர் உதயகுமார் மற்றும் கமிஷனர் சரண்யா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
