முதல்வர் பேச்சுக்கு கண்டனம் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
முதல்வர் பேச்சுக்கு கண்டனம் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 12, 2026 04:32 PM
அ நிறம் | அளவு
சென்னை: சட்டசபையில், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்து முதல்வர் விஜய் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, தி.மு.க.,வினர் நேற்று, சென்னையில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில், தி.மு.க., சென்னை கிழக்கு, வடக்கு, வடகிழக்கு மாவட்டம் சார்பில், பாரிமுனையில் உள்ள சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், சட்டசபையில் முதல்வர் விஜயின் ஆணவப் பேச்சை கண்டித்து, 500க்கும் மேற்பட்டோர், கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில், எம்.எல்.ஏ., சேகர்பாபு, எம்.பி., கிரிராஜன், மேயர் பிரியா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ‘ஐட்ரீம்’ மூர்த்தி, ஆர்.டி.சேகர், சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
