/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழந்தை கடத்தல் வதந்தி; பொய்யான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை
/
குழந்தை கடத்தல் வதந்தி; பொய்யான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை
குழந்தை கடத்தல் வதந்தி; பொய்யான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை
குழந்தை கடத்தல் வதந்தி; பொய்யான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை
UPDATED : மார் 02, 2024 07:39 AM
ADDED : மார் 02, 2024 12:14 AM

சென்னை, 'சமூக வலைதளங்களில் போலி வீடியோ பரப்பி, குழந்தை கடத்தல் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து, காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மேடவாக்கம் பகுதியில் சமீபத்தில், ஏழு குழந்தைகள் கடத்தப்பட்டு இருப்பதாகவும், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படியும், பெண் ஒருவரின் குரல் பதிவுடன் கூடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வீடியோ பதிவில் உள்ள குழந்தைகளின் உடல்கள், சில ஆண்டுகளுக்கு முன் வேறொரு இடத்தில் வேறு சில காரணங்களினால் உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் என தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்வதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் எச்சரித்துள்ளார்.
போலியான செய்திகளை கேட்டறிந்தாலோ, வீடியோவை பார்க்க நேர்ந்தாலோ, பொதுமக்கள் துளியும் அச்சப்பட வேண்டாம். காவல் துறை உதவி தேவையெனில் காவல் உதவி எண்: 100 அல்லது 112 கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவங்கள்
குழந்தை கடத்த வந்ததாக நினைத்து, திருவொற்றியூரில் வடமாநில இளைஞர் மீதும், பல்லாவரத்தில் திருநங்கை மீதும், பொதுமக்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர். வதந்திகளால் பீதியடைந்துள்ள மக்கள், அப்பாவிகளை தாக்குவதை தடுக்க, போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- சமூக ஆர்வலர்கள்.

