/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' பக்கெட் ' நீரில் மூழ்கிய குழந்தை பலி
/
' பக்கெட் ' நீரில் மூழ்கிய குழந்தை பலி
ADDED : ஜன 22, 2025 12:36 AM
மறைமலைநகர்,
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் அடுத்த மேலச்சேரி காவாங்கரை தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 28; எலக்ட்ரீஷியன். இவரது மனைவி ஜாய்ஸ், 25.
தம்பதிக்கு, இரு ஆண் குழந்தைகள். இதில், ஒரு வயது ஆண் குழந்தை அகஸ்டினுக்கு நேற்று முன்தினம் மதியம், வீட்டு வாசலில் அமர்ந்து ஜாய்ஸ் உணவு ஊட்டி உள்ளார்.
அப்போது, வீட்டுக்குள் சென்று மீண்டும் வெளியே வந்து பார்த்த போது, குழந்தைஇல்லை.
தெருக்குழாய் அருகே, அங்கு தண்ணீர் நிரப்பி வைத்திருந்த பக்கெட்டில் குழந்தை தலைகீழாக விழுந்து கிடந்தது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர், உடனே குழந்தையை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.