/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூளை தண்டுவட திரவ கசிவால் திணறிய குழந்தைக்கு எம்.ஜி.எம்.,மில் மறுவாழ்வு

ADDED : ஜூன் 20, 2025 12:16 AM

சென்னை, மூளை தண்டுவட திரவ கசிவால் பாதிக்கப்பட்ட, 1 வயது குழந்தைக்கு, எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மைய தலைவர் சஞ்சீவ் மொஹந்தி பேசியதாவது:
மூளை தண்டுவடத்திரவ கசிவு, மூளை மற்றும் தண்டுவடத்தை சுற்றியுள்ள பாதுகாப்பு சவ்வுகளில் கிழிசல் பாதிப்புடன், 1 வயது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
குழந்தைக்கு மூளை தண்டுவட திரவக்கசிவு மூக்கு வாயிலாக வெளியேறியது. இவற்றால், மூளைக்காய்ச்சல், மூக்கடைப்பு உள்ளிட்ட தீவிர பாதிப்பும் குழந்தைக்கு இருந்தது.
மிகவும் அரிதான இப்பாதிப்பு, 10,000 குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படுகிறது. இப்பாதிப்புக்கு உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்.
எனவே, மேம்பட்ட மற்றும் உயர் துல்லியமான, 'எண்டோஸ்கோப்பிக் இமேஜிங்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்த குறைபாடு சரி செய்யப்பட்டது.
குழந்தையின் மிக குறுகலான நாசிப்பாதை வழியாக பயணித்து, இச்சிகிச்சை அளிக்கப்பட்டது. இவற்றால், தழும்பு, வடு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. தற்போது, குழந்தை நலமுடன் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.