/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார் ஓட்டி விபத்து சிறுவர்களும் கைது
/
கார் ஓட்டி விபத்து சிறுவர்களும் கைது
ADDED : ஏப் 10, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடபழனி, வடபழனியைச் சேர்ந்தவர் ஷாம், 45. இவரது 14 வயது மகனிடம் காரின் சாவியை கொடுத்து, கார் மீது கவர் போடுமாறு கூறி அனுப்பினார்.
அப்போது, சிறுவன் மற்றும் அவரது நண்பர் சேர்ந்து காரை ஓட்டி பார்க்க, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நடந்து சென்ற முதியவர், பைக் மற்றும் ஆட்டோ மீது மோதியது. இதில், மூவர் காயமடைந்தனர்.
இது குறித்து விசாரித்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஓட்டுநர் உரிமம் இல்லாத மகனிடம் காரை கொடுத்த ஷாமை கைது செய்தனர். அத்துடன், காரை ஓட்டிய சிறுவன் மற்றும் அவரது நண்பரையும் கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

